Nepal-க்கு சென்ற இன்போசிஸ் சிஇஓ மாயம்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்.. என்ன நடந்தது..?

நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் அந்நாட்டின் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக ரசுவா, நுவாகோட், தடிங் உருக்குலைந்துள்ளன. இந்த மோசமான பாதிப்பின் காரணமாக இதுவரையில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமயமலையில் லாங்டாங் லிருங் மலையில் இருந்த 2000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 2400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதில் இன்போசிஸ்-ன் கிளை நிறுவனத்தின் சிஇஓ-வும் ஒருவராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Nepal-க்கு சென்ற இன்போசிஸ் சிஇஓ மாயம்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்.. என்ன நடந்தது..?

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்ற தனி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சிஇஓ லேக்ஸ் கோபிசெட்டி ஆவார், இவர் தனது சொந்த காரணங்களுக்காக நேபாளத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த கோர பெருவெள்ள விபத்துக்கு பின்பு இன்போசிஸ் நிறுவனத்தால் லேக்ஸ் கோபிசெட்டி-யை தொடர்புக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளது.

Also Read

இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக சேவை செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் கோபிசெட்டி-யை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பணிகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக அனைத்து அரசு அமைப்புகள், மீட்பு குழுக்கள் உடனும் இன்போசிஸ் நிர்வாகம் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கோபிசெட்டி-யின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Recommended For You

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் நேபாளத்திற்கு சென்ற 320 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாகவும், 400க்கும் அதிகமானவர்கள் நேபாள் - திபெத் எல்லையில் பகுதியில் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளையில் இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவிக்துள்ளது. மேலும் சீனா எல்லையில் மாட்டிக்கொண்ட 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பெருவெள்ளத்தின் பாதிப்பு நேபாள் மற்றும் சீனா கட்டுப்பாட்டில இருக்கும் திபெத் நாட்டில் அதிகமாக இருக்கும் கரணத்தால் காணாமல் போன 2400 பேரை கண்டுப்பிடிக்கும் பணியில் நேபாள அரசும், சீனாவும் தீவிரமாக இறங்கி தற்போது பணியாற்றி வருகிறது.

இதேவேளையில் நேபாள் இந்தியாவிடமும், சீனாவிடம் மீட்டுக்கான உதவிகளை கேட்டுள்ளது. தற்போது காணாமல் போன 2400 பேரில் சுமார் 517 பேர் வெளிநாட்டவர்கள் என்பதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+