இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் இன்று வர்த்தக நேரம் முடிவடைந்த பின்பு தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. ஏற்கனவே டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் 4வதாக அறிவித்துள்ளது, எப்போதும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தாக காலாண்டு முடிவுகளை இன்போசிஸ் வெளியிடும்.
2024 ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 5,945 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டின் 5360 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 2.9 சதவீதம் குறைவான அளவீடாகும், காலாண்டு முடிவுகள் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1.73 சதவீதம் சரிந்து 1,448.85 ரூபாயாக இருந்தது.

இதேபோல் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் வாயிலான வருமானம் 37,933 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இதன் அளவு 34,470 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் 37,441 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்காலாண்டில் மொத்த வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 38,494 கோடி ரூபாயாக உள்ளது, இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகமாகும். மேலும் நிலையான நாணய அளவீட்டில் இன்போசிஸ் வருமானம் வருடாந்திர அடிப்படையில் 4.2 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 1 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு வருடாந்திர அடிப்படையில் 0.7 சதவீதம் அதிகரித்து 20.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் earnings per share (EPS) அளவு 12.4 சதவீதம் அதிகரித்து 14.37 ரூபாயாக உள்ளது, ROE அளவு 180 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 32.8 சதவீதமாக உள்ளது.
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 17.3 சதவீதமாக உள்ளது, மேலும் 80 ஆக்டிவ் வாடிக்கையாளர்களின் திட்டங்களை இன்போசிஸ் செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications