அடிசக்க இன்போசிஸ் சொன்ன விஷயத்தை கேட்டீங்களா.. புது சிஇஓ வந்த நேரம் பண மழை..!

இன்போசிஸ் நிறுவனம் இன்று புதிய சிஇஓ பெயரை அறிவித்த கையோடு, ஜூன் காலாண்டு முடிவுகளையும் வெளியிட்டது. 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 7,769 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான 6,921 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் சுமார் 12 சதவீதம் அதிகமாகும். இதேபோல் இக்காலாண்டில் இன்போசிஸ் சுமார் 48,211 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது, இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும்.

இன்போசிஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு முக்கியமான விஷயமாக 2027ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் வளர்ச்சி 1.5 முதல் 3 சதவீதம் வரையில் இருக்கும் என அறிவித்துள்ளது, முந்தைய கணிப்பை காட்டிலும் மேல்மட்ட அதாவது அப்பர் லெவலை குறைந்துள்ளது. மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 20-22 சதவீதம் வரையில் இருக்கும் என அறிவித்துள்ளது. இவை இரண்டும் நிலையான நாணய அளவில் இன்போசிஸ் கணித்துள்ளது.

அடிசக்க இன்போசிஸ் சொன்ன விஷயத்தை கேட்டீங்களா.. புது சிஇஓ வந்த நேரம் பண மழை..!

ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபம் 10,163 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டின் 8803 கோடி ரூபாயை காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும். மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் 20.8 சதவீதத்தில் இருந்து 21.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மார்ச் காலாண்டை பார்க்கும் போது ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 21 சதவீதமாக இருந்தது.

இந்திய முதலீட்டு சந்தையில் தற்போது ஐடி நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் அனைத்து தரப்பினும் முக்கியமாக கவனிக்கும் விஷயமாக இருப்பது ஏஐ பிரிவின் வருவாய். இன்போசிஸ் நிறுவனத்தின் ஏஐ பிரிவு வருவாய் என்பது மொத்த வருவாயில் 8.2 சதவீதமாக உள்ளது. இக்காலாண்டில் 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது, இதில் 61 சதவீத ஆர்டர்கள் புதிய வர்த்தகத்தை சார்ந்தது.

இக்காலாண்டு முடிவில் சிஇஓ சலில் பரெக் பேசுகையில் ஏஐ தொழில்நுட்ப பிரிவில் உருவாகியுள்ள புரட்சி இன்போசிஸ்-க்கு சாதகமாக மாறி வருகிறது. தற்போது நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவிலான வருவாய் ஏஐ பிரிவில் இருந்து வருவது மட்டும் அல்லாமல் ஏஐ சேவை அளிக்கும் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை பங்கீடு அதிகரிக்க துவங்கியுள்ளது என தெரிவித்தார்.

ஜூன் காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,28,062 ஆக குறைந்துள்ளது, இது மார்ச் காலாண்டில் 3,28,594 ஆக இருந்தது. இதன் மூலம் கடந்த 3 மாதத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 530 பேர் குறைந்துள்ளனர். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 12.6 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+