Infosys: லாபத்தில் வெறும் 3% உயர்வு.. வருவாய் கணிப்பை குறைப்பு.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டில் வெறும் 3 சதவீத லாப உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இன்போசிஸ் பல மூத்த அதிகாரிகளை இழந்திருக்கும் வேளையில் இந்த மந்தமான காலாண்டு முடிவுகள் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனம் லாபத்தில் சுமார் 3 சதவீத வருடாந்திர உயர்வுடன் 6212 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, மேலும் வருவாய் 7 சதவீதம் உயர்ந்து 38,994 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது சில சந்தை கணிப்புகளை காட்டிலும் அதிகமானதாக இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அளவீட்டை ஈடு செய்ய முடியாமல் நிற்கிறது.

 Infosys: லாபத்தில் வெறும் 3% உயர்வு.. வருவாய் கணிப்பை குறைப்பு.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

காலாண்டு முடிவுகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இன்போசிஸ் நிர்வாகம் தனது வருவாய் வளர்ச்சியை 2024 ஆம் நிதியாண்டில் 1.0-2.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதற்கு முன்பு 1.0 முதல் 3.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில் தற்போது குறைத்துள்ளது.

இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களை சமாதானப்படுத்த ஒரு பங்கிற்கு சுமார் 18 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். இக்காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பது ஆப்ரேட்டிங் மார்ஜின் தான், தொடர்ந்து 20 - 22 சதவீத அளவில் உள்ளது. இக்காலாண்டில் 40 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 21.2 சதவீதமாக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 3% மற்றும் 7% ஆக வளர்ச்சி அடைந்த நிலையில், ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 3% மற்றும் 4.5% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் நிலையான நாணய மதிப்பில் இன்போசிஸ் வருவாய் காலாண்டு அடிப்படையில் 2.3 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 2.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் டிசிஎஸ் நிறுவனத்தை போலவே இன்போசிஸ் நிறுவனத்திலும் அட்ரிஷன் அளவும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் அட்ரிஷன் விகிதம் வருடாந்திர அடிப்படையில் 17.3 சதவீதத்தில் இருந்து 14.6 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 7530 குறைந்து தற்போது 3,28,764 ஆக உள்ளது.

ஜூன் காலாண்டுக்கும், செப்டம்பர் காலாண்டுக்கும் ஊழியர்கள் பயன்பாட்டு விகிதம் 78.9 சதவீதத்தில் இருந்து 80.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு முக்கிய வருவாய் ஈட்டும் துறையான நிதியியல் சேவை துறையின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 7.3 சதவீதம் குறைந்துள்ளது. நிலையான நாணய மதிப்பீட்டில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.

பிராந்திய அடிப்படையில் பார்க்கும் போது இன்போசிஸ் நிறுவனத்திற்கு முக்கிய வர்த்தக பகுதியாக இருக்கும் வட அமெரிக்காவில் வெறும் 1 சதவீத வருவாய் வளர்ச்சியை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஐரோப்பிய சந்தையில் 5.4 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+