இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
புதன்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட விப்ரோ பங்குகள் சுமார் 7 சதவீதம் வரையிலான சரிவைப் பதிவு செய்துள்ள நிலையில், ஐடி முதலீட்டாளர்கள் மத்தியில் இன்போசிஸ் காலாண்டு முடிவுகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.
இன்போசிஸ் தனது செப்டம்பர் காலாண்டின் முடிவில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்துள்ளதா..? தொடர்ந்து இன்போசிஸ் பங்குகளை வாங்கலாமா..?
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 36,538 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 23.4 சதவீதம் வருவாய் அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் லாப அளவில் 11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 6021 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் இதே காலகட்டத்தில் 18 சதவீத வளர்ச்சியில் 55,309 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இதேபோல் டிசிஎஸ் இக்காலாண்டில் 10,431 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 8.4 சதவீதம் அதிகமாகும்.
விற்பனை அளவுகள் உயர்வு
மேலும் இன்போசிஸ் நிறுவனம் ஹெச்சிஎல் நிறுவனத்தைப் போலவே தனது விற்பனை அளவுகளை நடப்பு நிதியாண்டில் 14-16 சதவீத வளர்ச்சியில் இருந்து 15-16 சதவீத வளர்ச்சியை அடைய உள்ளது. இதேபோல் மார்ஜின் அளவுகளை 21-13 சதவீதத்தில் இருந்து 21-22 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
புதிய வர்த்தகம்
இதோடு இன்போசிஸ் முதல் காலாண்டைக் காட்டிலும் 2வது காலாண்டில் அதிகப்படியான திட்டங்களைப் பெற்றுள்ளது. முதல் காலாண்டில் அதிகப்படியாக 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெற்ற நிலையில், 2வது காலாண்டில் அதிகப்படியாக 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை
முதலீட்டாளர்களைக் கவர இன்போசிஸ் தனது செப்டம்பர் காலாண்டு முடிவில் ஒரு பங்கிற்குச் சுமார் 16.50 ரூபாய் ஈவுத்தொகையை அளிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களைத் தக்க வைக்கவும் பெரிய அளவில் பயன்படும்.
அட்ரிஷன் விகிதம்
ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவீதத்தில் இருந்து 27.1 சதவீதமாகக் குறைந்தாலும், விப்ரோ-வின் 23 சதவீதமாக, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்- 23.8 சதவீதம், டிசிஎஸ்-ன் 21.5 சதவீதத்தை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications