டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் தீபாவளி பண்டிக்கை முன் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய இரு நிறுவனங்களும் லாபம், வருவாயில் வளர்ச்சியுடன் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இதில் ஹெச்சிஎல் முதல் முறையாக ஏஐ பிரிவு வருவாயை அறிவித்து புதிய டிரெண்டை உருவாக்கியது முதலீட்டாளர்களை கவர்ந்தது போல், இன்போசிஸ் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு முடிவில் நடப்பு ஆண்டின் வருவாய் வளர்ச்சியில் தனது முந்தைய கணிப்பை திருத்தி உயர்த்தி அறிவித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்ளும் வேளையில் இன்போசிஸ்-ன் இத்தகைய அறிவிப்பு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 13 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து இக்காலகட்டத்தில் நிகர லாபம் 7,364 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஆப்ரேட்டிங் வருவாய் 9 சதவீதம் அதிகரித்து 44,490 கோடி ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நிலையான நாணய அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 2.9 சதவீதமும், காலாண்டு அடிப்படைியில் 2.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஆப்ரேட்டிங் லாப வரம்பு வருடாந்திர அடிப்படையில் 0.10 சதவீதம் குறைந்து 21 சதவீதமாக உள்ளது.
முக்கியமான பாயின்ட் 1
இக்காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிறுவனம் 2026 நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி அளவீட்டில் தனது கீழ்மட்ட அளவை 1-3 சதவீதத்திலிருந்து 2-3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கை அதிகரித்திருப்பதை காட்டுகிறது. அதேசமயம், வருடாந்திர லாப வரம்பு 20-22 சதவீதம் என்பதை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான வலுவான செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளது.
முக்கியமான பாயின்ட் 2
முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்கனவே பைபேக் திட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது நிறுவனம் பங்குதாரர்களை தக்க வைக்கும் விதமாக இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 23 ரூபாய் அறிவித்துள்ளது. இதற்கான பதிவு தேதி அக்டோபர் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தகம்
இக்காலாண்டில் இன்போசிஸ் சுமார் 3.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது, இதில் 67 சதவீத ஒப்பந்தங்கள் புதிய வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சலில் பாரிக் சொன்ன விஷயம்
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலீல் பரேக் இக்காலாண்டு முடிவில் "நாங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளோம். இது எங்கள் தனித்துவமான சந்தை நிலைப்பாட்டையும் வாடிக்கையாளர் தொடர்பையும் காட்டுகிறது" என்று கூறினார்.
இன்போசிஸ் பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் இன்போசிஸ் பங்குகள் 0.2 சதவீதம் மட்டும் குறைந்து 1,470.9 ரூபாய் விலையில் முடிந்துள்ளது.
இன்போசிஸ் ஊழியர்கள்
செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 8203 பேர் அதிகரித்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தில் பெருமளவிலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications