டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் இன்று மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. எதிர்பார்த்தபடியே சக போட்டி நிறுவனங்களை போல சிறிய அளவிலான உயர்வை மட்டும் பதிவு செய்துள்ளது.
இரு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளுக்கு பின்பும் பங்கு விலை சரிந்த நிலையில் இன்போசிஸ் நிலைமை எப்படியிருக்கும் என ரீடைல் முதலீட்டாளர்கள் யோசித்து வரும் வேளையில் டிசம்பர் மாதத்துடன் முடிந்த இன்போசிஸ் காலாண்டு முடிவுகளை இப்போது பார்ப்போம்.

கடந்த ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தினஅ நிகர லாபம் டிசம்பர் 2024 காலாண்டில் 11% அதிகரித்து ரூ.6,806 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அப்ரேட்டிங் வருவாய் 8% அதிகரித்து ரூ.41,764 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் நிலையான நாணய மதிப்பில் இன்போசிஸ் டிசம்பர் காலாண்டின் வருவாய் 6.1% உயர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. காலாண்டு அடிப்படையில் 1.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் அப்ரேட்டிங் லாபம் 12% அதிகரித்து ரூ.8,912 கோடியாக உயர்ந்துள்ளது, இதன் விளைவாக ஆப்ரேட்டிங் விகிதம் 21.3% ஆக உயர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் தனது வருவாய் அளவு வளர்ச்சி அடையும் என நம்பி முன்பு அறிவித்த 4.5% அளவை 5% ஆக உயர்த்தியுள்ளது. இந்த திருத்தத்திற்கு முக்கியமான காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் வலுவான செயல்திறன் மற்றும் எதிர்காலத்திற்கான கண்ணோட்டம் சிறப்பாக இருந்துள்ளது தான்.
இந்த டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றது, இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்திற்கான தேவை சந்தையில் அதிகமாக இருப்பதை காட்டியுள்ளது. பல மூத்த அதிகாரிகள் வெளியேறிய பின்னரும் புதியாக பெறப்பட்ட ஆர்டர்கள் அளவு அதிகமாக இருப்பது அதன் சிறப்பான நிர்வாக கட்டமைப்பையும் காட்டுகிறது.
மேலும் ஜெனரேட்டிவ் ஏஐ போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்ப சேவை பிரிவிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இன்போசிஸ்.
துறைவாரியாக இன்போசிஸ் வளர்ச்சியை பார்க்கும் போது, நிதி சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகள் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து ரீடைல், எனர்ஜி, கம்யூனிகேஷ்ன் துறையில் அதிகப்படியான லாபத்தை பதிவு செய்துள்ளது.
இந்த டிசம்பர் காலாண்டு முடிவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,23,379 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இக்காலக்கட்டத்தில் அட்ரிஷன் விகிதம் 12.9 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications