இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2020ல் பல முக்கிய ஆர்டர்களைப் பெற்றுத் தொடர்ந்து தனது வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதையில் வைத்திருந்த காரணத்தால் டிசம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து சிறப்பான லாபத்தை அடைந்துள்ளது.
மேலும் சலில் பாரிக் தலைமையிலான இன்போசிஸ் லாக்டவுன் மற்றும் கொரோனா காலத்தில் எவ்விதமான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களைப் பெற்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
லாபத்தில் 16% வளர்ச்சி
டிசம்பர் 2020 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிலையான வர்த்தக வளர்ச்சி மற்றும் அதிகளவிலான செலவின குறைப்புக் காரணமாக இந்நிறுவனத்தின் லாபம் சுமார் 16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் வாயிலாக டிசம்பர் 2019ல் வெறும் 4,466 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற இன்போசிஸ் டிசம்பர் 2020ல் 5,215 கோடி ரூபாய் லாபத்தை அடைந்தது.
இன்போசிஸ் வருவாய்
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 12.3 சதவீத வளர்ச்சியில் 25,927 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றது. இது செப்டம்பர் காலாண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் நிலையான நாணய மதிப்பில் இதன் அளவீடு 6.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
7.13 பில்லியன் டாலர்
இந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் இன்போசிஸ் சுமார் 7.13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. மேலும் புதிதாகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரிவு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த வருவாயில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் டிஜிட்டல் பிரிவு வருவாய் அளவு கடந்த வருடத்தை விடவும் 31.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் புதிதாக வேன்கார்டு, டயாம்லர், ரோல் ராய்ஸ் என 3 முக்கிய மற்றும் முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகச் சேவைகள் பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
இதோடு இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 15.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது இந்நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications