அசத்தும் இன்போசிஸ்.. 3 மாதத்தில் 3.3 பில்லியன் டாலர் டீல்..!!

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. டிசிஎஸ் சந்தை கணிப்புகளை எட்ட முடியாத நிலையில் இன்போசிஸ் சந்தை கணிப்புகளைக் காட்டிலும் அதிகமாக வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து பெரும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்போசிஸ் நிலை என்ன..? சந்தை கணிப்பை உடைக்கும் அளவிற்கு லாபத்தைப் பெற்றுள்ள இன்போசிஸ், டிசிஎஸ்-ஐ நெருங்கியதா..?

டிசம்பர் காலாண்டில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இன்போசிஸ் லாபம்

இன்போசிஸ் லாபம்

2022 ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 6,586 கோடி ரூபாயை மொத்த நிகர லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் 5,809 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்ற நிலையில் தற்போது 6,586 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

இன்போசிஸ் வருவாய்

இன்போசிஸ் வருவாய்

இதே காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு 38,318 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 31,867 கோடி ரூபாய் பெற்ற நிலையில் தற்போது இந்த ஆண்டு வருவாய் அளவீட்டில் சுமார் 20.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சந்தை கணிப்புகள்

சந்தை கணிப்புகள்

இக்காலாண்டில் இன்போசிஸ் 37,613 கோடி ரூபாய் வருவாயும், 6418 கோடி ரூபாய் லாபமும் பெறும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டிலும் இன்போசிஸ் சந்தை கணிப்பை உடைத்து அதிக லாபத்தையும், வருவாயும் பதிவு செய்துள்ளது. இதேவேளையில் டிசிஎஸ் - இன்போசிஸ்-க்குமான இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது.

டிஜிட்டல் பிரிவு வருவாய்

டிஜிட்டல் பிரிவு வருவாய்

நிலையான நாணய மதிப்பீட்டில் இன்போசிஸ் டிசம்பர் காலாண்டில் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் 2.4 சதவீத அதிக வருவாயும், வருடாந்திர அடிப்படையில் 13.7 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. இதேவேளையில் மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவு வருவாய் மட்டும் 62.9 சதவீதம்.

இரட்டை இலக்க வளர்ச்சி

இரட்டை இலக்க வளர்ச்சி

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 23.5 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதேவேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும்.

ஆப்ரேட்டிங் மார்ஜின்

ஆப்ரேட்டிங் மார்ஜின்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 23.5 சதவீதத்தில் இருந்சு 21.5 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது. இதேவேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும்.

இன்போசிஸ் அட்ரிஷன் விகிதம்

இன்போசிஸ் அட்ரிஷன் விகிதம்

இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் டிசம்பர் காலாண்டில் 24.3 சதவீதமாக இருந்தது, முந்தைய காலாண்டில் இது 27.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 25.5 சதவீதமாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 21.3 சதவீதமாக உள்ளது.

டிசிஎஸ் லாபம், வருவாய்

டிசிஎஸ் லாபம், வருவாய்

டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு 10.98 சதவீதம் அதிகரித்து 10,883 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் 19.11 சதவீதம் அதிகரித்து 58,229 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் டிசிஎஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும்.

டிசிஎஸ் ஈவுத்தொகை

டிசிஎஸ் ஈவுத்தொகை

டிசிஎஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் சிறப்பு ஈவுத்தொகையாக 67 ரூபாய் சேர்த்து ஒரு பங்கிற்குச் சுமார் 75 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இன்போசிஸ் இக்காலாண்டில் ஈவுத்தொகை அறிவிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+