இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள வேளையில் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கியமான சில தகவல்களும் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே ரெசிஷன் குறித்த அச்சத்துடன் துவங்கிய நிலையில் காலாண்டு முடிவுகளைத் தாண்டி எங்குத் திரும்பினாலும் பணிநீக்க அறிவிப்புகள் டெக் ஊழியர்களைப் பயமுறுத்தி வருகிறது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் இன்போசிஸ் செய்ததைப் பார்க்கும் போது ஐடி சேவை துறையில் இருப்போர் உஷாராக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்திய ஐடி துறை
இந்திய ஐடி துறைக்கு ரெசிஷன் மூலம் எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனக் கூறப்பட்டாலும், உண்மையில் முன்னணி ஐடி சேவை துறை நிறுவனங்களும் ரெசிஷன் அச்சத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
4 முன்னணி ஐடி நிறுவனங்கள்
இதை உறுதி செய்யும் வரையில் இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் புதிதாகச் சேர்க்கப்டும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சிலில் பாரீக்
சிலில் பாரீக் தலைமையிலான இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் 84 சதவீதம் சரிந்து வெறும் 1,627 ஆக உள்ளது, கடந்த காலாண்டில் இதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்ரிஷன் விகிதம்
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 27.10 சதவீதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் 24.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூற முடியும்.
9 காலாண்டில் மோசம்
இன்போசிஸ் நிறுவனத்தின் கடந்த 9 காலாண்டில் குறைவான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது இந்த டிசம்பர் காலாண்டு தான். கடைசியாக ஜூலை - செப்டம்பர் 2021 காலாண்டில் இன்போசிஸ் 975 ஊழியர்களை மட்டுமே புதிதாகப் பணியில் சேர்த்தது. இந்தக் காலகட்டத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
டிசம்பர் 2022 காலாண்டு முடிவில் இன்போசிஸ் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 3,46,845 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி 2023 ஆம் நிதியாண்டு இலக்கான 50000 ஊழியர்கள் சேர்ப்பை கட்டாயம் அடைந்து விடுவோம் எனத் தெரிவித்தார்.
டிசிஎஸ்
இதே காலகட்டத்தில் இன்போசிஸ்-ன் சக போட்டி நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர்.
டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 28,238 ஊழியர்களைச் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications