நாட்டில் கொரோனாவின் உக்கிரம் நாட்டில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3.1 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 3.1% வீழ்ச்சி கண்டு 4,335 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் 4,466 கோடி ரூபாயாக அதன் நிகரலாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு வருவாய்?
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த மார்ச் மாதத்தில் 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23,267 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு காலாண்டில் 23,092 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 12.3%, கடந்த 201- 20ம் நிதியாண்டில் 13.75% வீழ்ச்சி கண்டுள்ளது.
இயக்க லாபம் எவ்வளவு?
இதே செயல்பாட்டின் மூலம் இயக்க லாப அளவு 21.20 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் மூலமாக 21.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சலீல் பரூக் 2020ம் ஆண்டில் 9.8 சதவீத வளர்ச்சியுடனும். செயல்பாட்டு அளவு 21.3 சதவீதத்துடனும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சம்பளம் உயர்வு, பதவி உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்
இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்காலிகமாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சேவையை அளித்து வருகிறோம்
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி 93 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. எனினும் மோசமான இந்த சூழ் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்வது மிக சவாலான விஷயமான உள்ளது. எனினும் நாங்கள் சற்று வலுவுடன் இணைந்து, நல்ல சேவையை அளித்து வருகிறோம் என்றும் சலீல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications