சந்தை மதிப்பின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டு முடிவினை இன்று வெளியிட்டுள்ளது.
அதன் படி கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 7.2% அதிகரித்து, 5,809 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 7.7% அதிகரித்து, 31,867 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு
இதே கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 5,197 கோடி ரூபாயாக அதன் லாபம் இருந்தது நினைவுகூறத்தக்கது. அதே போல செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமும் கடந்த ஆண்டினை காட்டிலும் 23% அதிகரித்து, 31,867 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 25,927 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வலுவான தேவை
நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் விகிதத்தினை 19.5 - 20% ஆக இந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. இது தொடர்ச்சியாக நல்ல வருவாயினை கண்டு வரும் நிலையில் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடப்பு காலாண்டில் காணப்பட்டுள்ள வளர்ச்சி விகிதமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், ஐடி துறையில் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், அதன் ஒப்பந்தத்தின் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள் மதிப்பு
குறிப்பாக மூன்றாவது காலாண்டில் மட்டும் அதன் ஒப்பந்த TCV மதிப்பு 2.53 பில்லியன் டாலராகும்.
இந்த காலாண்டில் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது 23.5% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டினை காட்டிலும் 1.9% குறைந்துள்ளதாகவும், கடந்த காலாண்டினை காட்டிலும் 0.1% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் வருவாய்
இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் வருவாயானது அதன் மொத்த வருவாயில் 58.5% ஆக அதிகரித்துள்ளது.
ஒரு புறம் பல சவால்களுக்கு மத்தியில் செலவினங்கள் அதிகரித்தாலும், மேம்படுத்தப்பட்ட செலவு முறைகள், அன்னிய செலாவனி, நிலையான விலைச் சூழல் உள்ளிட்ட பலவும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார்.
இன்றைய பங்கு விலை நிலவரம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது NSEல் 1.18% அதிகரித்து, 1877.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1889 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1860 ரூபாயாகும்.
இதே BSEல் இதன் பங்கு விலையானது 1.16% அதிகரித்து, 1877.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1889 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1860.60 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்ச விலை 1914 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1230 ரூபாயாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications