இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு Baa1 என்ற மதிப்பீட்டினை மூடீஸ் வழங்கியுள்ளது. இதில் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் 13% வருவாயையும், டிசிஎஸ் 8% வளர்ச்சியினையும் காணலாம் என மூடீஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
முதலீட்டாளர் சேவையை வழங்கும் மூடீஸ் நிறுவனம், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமும் கூட. இந்த நிறுவனம் புதன்கிழமையன்று ஐடி ஜாம்பவான்களான இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்தான கணிப்பினை வெளியிட்டுள்ளது.
வருவாய் வளர்ச்சி
இவ்விரு ஐடி நிறுவனங்களுக்குமே Baa1 என்ற மதிப்பீட்டினை வழங்கியிருந்தாலும், வருவாய் வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தினை காட்டிலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக கொடுத்துள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 8% ஆக கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியானது 13% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.
அடுத்த ஆண்டில் எப்படியிருக்கும்?
நடப்பு நிதியாண்டில் இவ்விரு நிறுவனங்களும் நல்ல வருவாய் வளர்ச்சியினை கண்டாலும், அடுத்த ஆண்டில் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என்றும் மூடீஸ் கணித்துள்ளது.
இதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதமானது 8% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 5% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதெல்லாம் சரி செய்யணும்
சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், இன்ஃபோசிஸ் பணியமர்த்தல் மற்றும் அட்ரிஷன் போன்ற விவகாரங்களை மேம்படுத்த வேண்டும் என்று அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் அட்ரிஷன் விகிதம் என்பது சீராக குறைந்து வருகின்றது. இது மார்ஜின் சரிவை தடுக்கலாம். அதேசமயம் பயன்பாட்டு விகிதத்தினை நிறுவனம் மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எபிட்டா மார்ஜின்
2024 மற்றும் 25ம் நிதியாண்டுகளில் இன்ஃபோசிஸ் எபிட்டா மார்ஜின் சுமார் 24% இருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது.
டிசிஎஸ் - நிறுவனத்தின் அறிக்கையிலும் இதுபோன்றதொரு அறிவிப்பினை மூடீஸ் நிறுவனம் கொண்டுள்ளது. தொடர்ந்து பணியமர்த்தல் குறைந்து வருவது மார்ஜின் அழுத்தத்தினை குறைக்கலாம். இது 2024 மற்றும் 2025ம் நிதியாண்டுகளில் எபிட்டா விகிதம் 25% ஆக மதிப்பிட்டுள்ளது.
வருவாயில் மாற்றம் இருக்கலாம்
இவ்விரு நிறுவனங்களுக்கு இடையே வருவாயில் மாற்றம் இருக்கலாம் என்று கூறினாலும் இரு நிறுவனங்களுக்குமே ஸ்டேபிள் என்ற மதிப்பீட்டினையே கொடுத்துள்ளது.
இதற்கிடையில் இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 1.09% அதிகரித்து, 3557.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.15% அதிகரித்து, 1599.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
பங்கினில் தாக்கம் இருக்கலாம்
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் தேவை சரிந்துள்ளதாக,செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் பணி நீக்கமே செய்து வருகின்றன.
இந்த நிலையில் மூடீஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது அதனை சரி என்னும் கோணத்தில் வந்துள்ளது. இது மேற்கொண்டு பங்கு விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications