இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் வேளையில், நிதியியல் முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அடைய வைக்கும் அளவில் இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் இன்று ஹெச்சிஎல் தவிர டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகள் சரிவில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகிய இரு முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு குட்நியூஸ் கொடுத்துள்ளது. இந்த வாரத்தில் டிசிஎஸ் 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே, விப்ரோ டிசம்பர் 1 ஆம் தேதி சம்பள உயர்வை அளிப்பதாக அறிவித்தது. இதனால் இன்போசிஸ், ஹெச்சிஎல் ஊழியர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய், நவம்பர் 1 ஆம் தேதி முதல் தனது நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் லாபத்தில் டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை ஓரம்கட்டும் அளவில் 10 சதவீதம் வரையிலான உயர்வுடன் லாபத்தை பதிவு செய்த HCL TECH நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ராமச்சந்திரன் சுந்தரராஜன் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது கூறுகையில், அக்டோபரில் துவங்கிய காலாண்டில் அதன் 90% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்தார்.
இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு பொதுவாக ஜூன், ஜூலை மாதத்தில் அறிவிக்க வேண்டிய சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிடாமல் இருந்த காரணத்தால் இந்நிறுவன ஊழியர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாத இறுதியிவ் இன்போசிஸ் அதன் மேனேஜர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் செம்படம்பர் 29 முதல் ஊழியர்களுக்கான செல்ஃப் எவால்யூவேஷன் துவங்கும் அக்டோபர் மாதம் ஃபர்பாமென்ஸ் ரிவ்யூ சைக்கிள் துவங்கும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் பல இன்போசிஸ் ஊழியர்கள் இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். ஆனால் இன்ஃபோசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய், நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு மூலம் இப்போதே பார்டி பண்ண துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications