போனஸ் தொகையைக் குறைத்து அறிவித்த இன்ஃபோசிஸ்! அதிருப்தியில் இருக்கும் ஊழியர்கள்!

நம் நாட்டில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய ஐடி நிறுவனம் தான் இன்ஃபோசிஸ். இந்நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டுக்கான போனஸ் தொகையை 65 சதவீதமாக வழங்கியுள்ளது. சிக்கலான பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையிலும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட இருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் 80 சதவீத போனஸ் தொகையையும், 2-வது காலாண்டில் 90 சதவீத போனஸ் தொகையையும் தங்கள் ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கியது. இந்த போனஸ் தொகை 2025-ஆம் ஆண்டின் மே மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனஸ் தொகையைக் குறைத்து அறிவித்த இன்ஃபோசிஸ்! அதிருப்தியில் இருக்கும் ஊழியர்கள்!

இதுகுறித்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு மெயிலையும் அனுப்பியுள்ளது. அதில் "பொருளாதார சூழல் மந்தமாக இருந்த போதிலும் நான்காவது காலாண்டில் நம்முடைய வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பணிபுரிந்துள்ளோம்" என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தது.

2025-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இன்ஃபோசிஸின் நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைந்து 7,033 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் சந்தை ஆய்வாளர்களின் லாப விகிதக் கணிப்பை இந்த முறை நிறுவனம் எட்டவில்லை. ஏனெனில் ஆய்வாளர்கள் 7,278 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைக்கும் என்று கணித்திருந்தனர்.

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2026-ஆம் நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி தற்போதைய வருவாயை விட 3 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. பொருளாதார சவால்கள் இருந்த போதிலும், இந்தியாவின் முதல் 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ந்து இந்நிறுவனம் ஒற்றை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்த போனஸ் தொகை தற்போது பேண்ட் 6 மற்றும் அதற்கு கீழ் பணி புரியும் ஜூனியர் முதல் மிட் லெவல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு காலாண்டு அடிப்படையில் மாறுபடும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஊழியர்களின் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் போனஸ் சதவீதம் மாறுபடலாம். சிறப்பான செயல் திறனை காண்பித்தவர்களுக்கு அதிகபட்சமாக 83 சதவீதம் வரை போனஸ் தொகை வழங்கப்படவுள்ளது.

ஆனால் இந்த போனஸ் தொகை அனைவருக்கும் கிடையாது. தங்கள் செயல் திறனில் இன்னும் பயிற்சி தேவைப்படும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், "இந்த போனஸ் மிகவும் குறைவு", என்று கூறினார்.

சமீப காலமாகவே பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் வாடிக்கையாளர்கள் தங்கள் செலவினங்களை குறைக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்கள் பெரும் பிரச்சனையில் இருந்து வருகிறது.

கடந்த 2 காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த முறை போனஸ் தொகை குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பெரும் அளவில் பாதித்துள்ளது. இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், நிறுவனம் தங்கள் நிதி நிலை மற்றும் வருவாய்க்கு ஏற்ப இந்த முடிவை எடுத்தது போல தெரிகிறது. இனிவரும் காலாண்டுகளில் பொருளாதார நிலை சீரடைந்தால் போனஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+