ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் உயர்ந்தது மூலம் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்தது மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள் எவ்வளவு வர்த்தகத்தை பெறும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்குமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. ஒருபக்கம் இந்த நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு ஏஐ துறையில் பயிற்சி அளித்தாலும் இது உலகளவிய தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், ரூ.18,000 கோடி மதிப்பிலான பெரிய அளவிலான பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பங்கு விலை சரிவு மூலம் பெரும் இழப்பை சந்தித்துக்கொண்டு இருக்கும் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு இது உடனடி நன்மை அளிக்கும் என்றாலும், இந்த முடிவு நிறுவனத்தின் நீண்டகால உத்தியை கேள்விக்குள்ளாக்குகிறது என ஜெயந்த் முந்ரா தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் இன்போசிஸ் மொத்தம் ரூ.60,000 கோடிக்கும் அதிகமான தொகைக்கு பங்குகளை பைபேக் செய்ய செலவழித்துள்ளது. இந்த பெரும் தொகை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதுமையான விஷயங்களை உருவாக்கவும் அல்லது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தியிருந்தால், இன்போசிஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடிந்திருக்கும்.
ஆனால், இந்த தொகை தனது பங்குகளை உயர்ந்த விலையில் சந்தையில் இருந்து பைபேக் செய்ய மட்டுமே சென்றுள்ளது. இது நிர்வாக ரீதியிலும், குறுகிய காலக்கட்டத்திலும் பாதுகாப்பான முடிவாக தோன்றினாலும், இது தொழில்நுட்பத் துறையின் புதிய சவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது என ஜெயந்த் முந்ரா தெரிவித்துள்ளார்.
ரூ.60,000 கோடி என்பது ஒரு பெரும் நிதி, இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு புதிய வழிகளை திறக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இந்த தொகை பங்கு மறு கொள்முதல்களில் மட்டுமே செலவழிக்கப்பட்டதால், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு போன்ற உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களில் பங்கேற்க தவறிவிட்டது. இது, தற்போதைய முதலீட்டாளர்களை திருப்திபடுத்தும் அதே நேரம், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை பலவீனப்படுத்தும் என ஜெயந்த் முந்ரா தெரிவித்துள்ளார்.
நந்தன் நிலேகனி
இன்போசிஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை 2005ல் வெளியிட்டுள்ள தகவல்படி சுமார் 400 ஜென் ஏஐ திட்டங்களில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. 2024ல் வெறும் 225 திட்டங்கள் மட்டுமே பணியாற்றி இருந்த நிலையில் சுமார் 75 சதவீத உயர்வுடன் 400 திட்டங்களில் பணியாற்றி வருகிறது என தெரிவித்துள்ளது. இதேபோல் 2025ஆம் நிதியாண்டின் முடிவில் இன்போசிஸ்-ன் 3.2 லட்சம் ஊழியர்களில் சமார் 2.7 லட்சம் ஊழியர்கள AI-aware நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்போசில் சேர்மன் நந்தன் நிலேகனி வருடாந்திர அறிக்கையில் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், வரலாறு காணாத மிகவும் நிலையற்ற சூழ்நிவையில் நாம் உள்ளோம். தற்போது பல டிரெண்ட்-கள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் நம்முடைய அடிப்படை வர்த்தக முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு
இந்திய ஐடித் துறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பெரும் மாற்றத்தை சந்திக்கும் நிலையில், இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ரூ.60,000 கோடி தொகை, செயற்கை நுண்ணறிவு பொருட்களை உருவாக்க அல்லது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தியிருந்தால், இந்நிறுவனம் உலகளாவிய டெக் வர்த்தகத்தில் முதன்மையான நிலையில் இருந்திருக்க முடியும்.
ஆனால், பங்கு பைபேக் எனும் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுத்ததால், இந்த வாய்ப்புகள் தவறின. இது, நிறுவனத்தின் உத்தி குறுகிய கால லாபங்களை மட்டும் பயன்பெறும், நீண்ட கால வளர்ச்சிக்கு உதவாது என ஜெயந்த் முந்ரா தனது பதிவில் தெரிவித்தார்.
இந்திய ஐடித் துறை
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படும் கோடிங், பராமரிப்பு மற்றும் சப்போர்ட் பணிகள் போன்றவை தற்போது அதிகளவில் ஏஐ மூலம் ஆட்டோமேட் செய்யப்படுவதால், இத்துறையின் லாப அளவுகள் குறைய துவங்கியுள்ளன.
புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் திட்டங்களை பெற அதிகளவில் பேரம் பேசி, செலவு குறைக்க முயல்கின்றனர். மேலும், பல செயல்பாடுகள் உள்நாட்டில் அல்லது உலகளாவிய திறன் மையங்களுக்கு மாற்றப்படுவதால், வெளியுறவு செய்யப்பட்ட பணிகள் குறைந்து வருகின்றன.
இந்த சூழலில், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்யாமல், பங்குகளை பைபேக் தேர்ந்தெடுப்பது, துறையின் எதிர்கால சவால்களை ஏற்காததாகக் கருதப்படுகிறது என ஜெயந்த் முத்ரா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ப்ராடெக்ட் உருவாக்குவதில் கவனம் செலுத்த தவறியதன் விளைவாகவை ஏஐ தொழில்நுட்பத்தால் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

விஷால் சிக்கா
இன்போசிஸின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா, ஒப்பன்ஏஐ என்ற சிறிய நிறுவனத்தில் பங்கு வாங்குவதற்கான முயற்சியை வழங்கியபோது, நிறுவன நிர்வாகம் அதை நிராகரித்தது. இதன்பின் சிக்கா நிறுவனத்தை விட்டு விலகினார், அதே நேரம் இன்போசிஸ் நிறுவனத்தில் பெரிய அளவிலான பைபேக் திட்டங்கள் தொடங்கின.
ஒப்பன்ஏஐ இன்று உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக உள்ள நிலையில், இந்த வாய்ப்பை தவறவிட்டது, மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications