இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டமானது ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளது. இந்த பைபேக் திட்டத்தில் பங்குகளின் விலையை அதிகபட்சமாக 1,750 ரூபாய் வரை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த பங்குகளை திரும்ப பெறுவதற்கான ஒப்புதலை நிர்வாகம் கடந்த ஏப்ரல் 14, 20201 அன்று வழங்கியது. இதே பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள்களில் அறிவிப்பு
பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், பங்கு சந்தை வழியாக ஓபன் மார்கெட் மூலம் பங்குகளை திரும்ப பெறுவதாக ஜூன் 23 அன்று பல செய்தித்தாள்களில் ஒரு பொது அறிவிப்பினையும் வெளியிட்டது. இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்த தாக்கலிலும் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தொடக்கம்
பங்குகளை திரும்ப பெறும் இந்த திட்டத்திற்கு கோடக் மகேந்திரா கேப்பிட்டல் நிறுவனம், மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ஜூன் 25 முதல் பங்குகள் திரும்ப வாங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதி டிசம்பர் 24, 2021 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி இருப்பு?
இந்த பைபேக் திட்டத்திற்கான நிதியினை அதன் ப்ரீ ரிசர்வ்வில் இருக்கும் தொகை அல்லது பிறவற்றின் மூலமும் பெறப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைபேக் திட்டமானது விதிமுறை 16ன் படி ஒபன் மார்கெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் புரோமோட்டர், புரோமோட்டார் குழு மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நபர்களுக்கு இல்லை.
இன்ஃபோசிஸ் பங்கு விலை
நாளை பைபேக் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, என்.எஸ்.இ-யில் 3.43% அதிகரித்து, 1554.60 ரூபாயாக காணப்படுகிறது.
இதே பி.எஸ்.இ-யில் 3.56% அதிகரித்து, 1555 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று மட்டும் 50 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications