டெல்லி: ஆசியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த திங்களன்று ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நல்ல செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 6 சதவிகிதம் வரை உயர்ந்தது. தற்போது பி எஸ் இ-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கின் விலை 725 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
பெயர் சொல்ல விரும்பாத நபர்கள் கொடுத்த புகார்களைப் பொறுத்த வரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, இந்த புகாரை விசாரிக்க நியமித்த சட்ட நிறுவனமான ஷார்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்ட் கோவின் விசாரணையைத் தொடரச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த விவரங்களை எல்லாம் பங்குச் சந்தைகளுக்கு முறையாக தெரியப்படுத்தி இருக்கிறார்களாம்.
அதோடு, பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் கொடுத்த புகாரில், எந்த ஒரு நம்பகத் தன்மையோ, உறுதித் தன்மையோ இல்லை. தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த பிரச்னை குறித்து மேற்கொண்டு எதையும் பேச முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள் இன்ஃபோசிஸ் தரப்பினர்கள்.
"விசாரணை முழுமையாக முடிந்த பின், கிடைக்கும் விசாரணை அறிக்கைகளை வைத்து, முக்கிய விவரங்களை பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்துவோம்" என்று இன்ஃபோசிஸ் நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, தங்களின் இண்டர்னல் ஆடிட்டரான எர்ன்ஸ்ட் & யங்குடனும் இந்த பிரச்னை குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது இந்த புகார் எழுந்த போது, ஒரு தனி விசாரணை நடத்த ஷர்துல் அமர்சந்த் மங்கள் தாஸ் அண்ட் கோ நிறுவனத்தை அமர்த்துவதற்கு முன்பில் இருந்தே, எர்னஸ்ட் அண்ட் யங் ஆடிட்டர்களுடன் இந்த புகாரைப் பற்றிப் பேசி வருகிறார்களாம். எது எப்படியோ ஒரு மிகப் பெரிய இந்திய கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது சுமத்திய குற்றங்கள் ஒழுங்காக விசாரிக்கப்பட்டு ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது தான்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications