இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுக்கான அறிவிப்புகளைப் பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்போசிஸ் நிறுவன தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் படி, இந்த சம்பள உயர்வில் ஊழியர்களுக்குச் சராசரியாக 5% முதல் 8% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25 நிதியாண்டிற்கான இந்த சம்பள மாற்றங்கள் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும். டெக் துறையில் டிமாண்ட் குறைந்த காரணத்தால் பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு சம்பள உயர்வு, தற்போது வர்த்தக சூழ்நிலை மேம்பட்ட உடன் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்துள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட 6-8 மாதங்களுக்கான அரியர் தொகையை இன்போசிஸ் இந்த கால தாமதம் மூலம் சேமித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வை இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வு ஜூன் - ஜூலையில் வருமா அல்லது அடுத்த வருடம் தான் கொடுக்குமான என்ற கேள்வியும் இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் வரவிருக்கும் புதிய நிதியாண்டில் உலகளாவிய நிறுவனங்கள் தொழில்நுட்ப சேவைக்காக அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அதிக வர்த்தகத்தை கைப்பற்றும் என கருத்து நிலவுகிறது.
குறிப்பாக வட அமெரிக்காவிலிருந்து தங்கள் வருவாயைப் பெருமளவில் ஈட்டும் இந்திய ஐடி நிறுவனங்கள், இப்பகுதியில் இருந்து விசா பிரச்சனைகளைத் தாண்டி அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறும் என நம்பிக்கை வைத்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் இந்த சம்பள உயர்வுடன், இன்போசிஸ் படிப்படியாகத் தனது ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கடிதங்களையும் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவி உயர்வு கடிதங்களின் முதல் தொகுதி டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி இறுதிக்குள் மற்றொரு சுற்றில் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதி, இன்போசிஸ் தனது இந்திய ஊழியர்களுக்கு 6% முதல் 8% வரை வருடாந்திர சம்பள உயர்வுகளை அமல்படுத்தும் என அறிவித்த நிலையில் தற்போது இதைச் செயல்படுத்த உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது 3.23 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்ஃபோசிஸ், தனது மைசூர் கேம்பஸ்-ல் பணியாற்றி வந்த சுமார் 400 டிரைனி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள தகவலும், ஊழியர்களை வெளியேற்றிய விதமும் டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளானது. 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் பணியில் சேர்ந்தவர்களில் பாதி பேர் இந்த பணிநீக்கத்தால் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இன்போசிஸ் மட்டும் அல்ல பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்கு பயிற்சி அளிக்கும் காலத்தில் அவர்களின் திறனை பரிசோதனை செய்ய அவ்வப்போது தேர்வுகளை வைக்கும். இத்தகைய தேர்வில் மூன்று முறை தொடர்ச்சியாக உள் தேர்வுகளைத் தோல்வி அடைந்ததால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதை தான் தற்போது இன்போசிஸ் நிறுவனத்திலும் நடந்துள்ளது, ஆனால் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையும், வெளியேற்றப்பட்டத்தில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை தான் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications