மூன்லைட்டிங் என்பது சமீபத்திய காலமாக பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக விப்ரோ நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கு பிறகு, இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் சல சலப்பினை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்த 12 மாதங்களில் இரட்டை வேலை செய்து வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் இரண்டு நிறுவனங்களில் பணி புரிவதால் நிறுவனத்தின் ரகசியத் தன்மை, தரவு பாதுகாப்பு அச்சத்தால் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்ஃபோசிஸ் பணி நீக்கம்
விப்ரோ இந்த இரட்டை வேலைக்கு எதிரான பணி நீக்கத்திற்கு பிறகு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.
கடந்த 12 மாதங்களாக நிறுவனங்களாக, ஊழியர்கள் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்ததை நாங்கள் கண்டறிந்தோம். அவர்களை பணி நீக்கமும் செய்துள்ளோம் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரியுமான சலீல் பரேக் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு ஆதரவு
எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்தான விவரங்களை குறிப்பிடவில்லை.
ஊழியர்கள் வெளிப்புற கிக் வாய்ப்புகளை பெறுவதற்கு நிறுவனம், விரிவான கொள்கைகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றது. ஊழியர்கள் வெளிப்புற சூழலில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற, ஊழியர்களின் நோக்கத்தினை நாங்கள் ஆதரிக்கிறோம். ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்.
ஆதரவு இல்லை
அதற்கான விரிவான கொள்கையும் நாங்கள் உருவாக்கி வருகின்றோம். எனினும் நாங்கள் இரட்டை வேலை வாய்ப்பை ஆதரிக்கவில்லை. நாங்கள் எங்கள் நிறுவனத்திற்குள் எங்கள் ஊழியர்களை ஆதரிக்கிறோம்.
ஒரு காலாண்டில் சராசரியாக சுமார் 4000 ஊழியர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதில் 600 பேர் தேர்தெடுக்கப்படுகிறார்கள் என பரேக் கூறியுள்ளார்.
விப்ரோ சிஇஓ கருத்து
முன்னதாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலாபோர்ட்-ம் மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு இல்லை என்பதை தெளிபடுத்தினார். மேலும் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மதிக்கப்படவேன்டும். கொள்கைக்கு முரண்பாடாக ஊழியர்கள் பணிபுரியும்போது அதனை எப்படி ஏற்றுக் கொள்வது. நாங்கள் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.
முரண்பாடு இது தான்
நிறுவனம் புதிதாகவோ அல்லது வித்தியாசமாகவோ எதையும் செய்யவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் உள்ள உட்பிரிவுகளின் படி உள்ளது. விப்ரோவில் நீங்கள் இணையும்போது அது உங்களுக்கு தெளிவாக தெரியும். நான் இரண்டாம் வேலை பற்றி பேசவில்லை. ஆனால் முரண்பாட்டினைத் பற்றி பேசுகிறேன். எங்கள் ஊழியர்கள் அதனை புரிந்து கொள்கிறார்கள் என தியரி சுட்டிக் காட்டியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications