இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியான சலில் பரேக் 2025 நிதியாண்டுக்கான சம்பளம் 22 சதவீதம் உயர்ந்து ரூ.80.6 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கையோடு 2024-25 ஆம் நிதியாண்டின் முழு நிதி அறிக்கையும் ஐடி நிறுவனங்கள் வெளியிட்டது.
இதை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளத்தையும், பங்கு உரிம விபரத்தையும் வெளியிட்டு வரும் வேளையில் தற்போது இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் சம்பளம் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.

ஐடி வர்த்தக சந்தை நிச்சயமற்ற நிலையில் உள்ள போதும், இன்போசிஸ் டிரைனி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட வேளையிலும், ஊழியர்களின் வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் அதிகப்படியான சம்பள உயர்வை பெற்றுள்ளார்.
சலில் பரேக், 22 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை பெற முக்கிய காரணம், அவருக்கு அளிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பங்குகளை (RSUs) அதிகளவில் விற்பனை செய்து பணமாக பெற முடிவு செய்தது தான். ஏப்ரல் 17, 2025 அன்று, இன்ஃபோசிஸ் நிறுவனம் பரேக்கிற்கு ரூ.50 கோடி மதிப்பிலான பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களை (ESOPs) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2025 நிதியாண்டில், சலில் பரேக் பெற்றுள்ள 80 கோடி ரூபாய் சம்பளத்தில் ரூ.49.5 கோடி பங்கு விற்பனை மூலம் கிடைத்த தொகை, இது கடந்த ஆண்டு ரூ.39 கோடியாக இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.
இதை தொடர்ந்து சிலில் பரேக் அடிப்படை சம்பளமாக ரூ.7.5 கோடியாகவும், ஓய்வூதிய பலன்கள் ரூ.50 லட்சத்தையும் பெற்றுள்ளார். இது கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எவ்விதமான மாற்றமும் இல்லை.
இதை தொர்ந்து சலில் பரேக்-ன் variable pay ரூ.19.8 கோடியிலிருந்து ரூ.23.2 கோடியாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் சேர்த்து தான் 2025ஆம் நிதியாண்டுக்கு சிலில் பரேக் ரூ.80.6 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.
இன்ஃபோசிஸ் ஊழியர்களின் சராசரி ஊதியமான ரூ.10.72 லட்சத்தை விட சலில் பரேக்-ன் சம்பளம் 752 மடங்கு அதிகமாகும்.
சலில் பரேக்கின் ஊதியம், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) மற்றும் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-க்களின் சம்பளத்தை விட அதிகமாக உள்ளது.
TCS-இன் தலைமை நிர்வாக அதிகாரி கே.கிருதிவாசனின் சம்பளம் 2025ஆம் நிதியாண்டில் 4.6 சதவீதம் உயர்ந்து ரூ.26.5 கோடியாகவும், விப்ரோவின் தலைமை நிர்வாகி ஸ்ரீநிவாஸ் பள்ளியாவின் சம்பளம் 10 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.53.6 கோடியாகவும் உள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் 2025 நிதியாண்டில் 15,000 பிரஷ்ஷர்ஸ் ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆண்டு இறுதியில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,20,000 என்ற அளவீட்டை தாண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications