பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் மாத காலாண்டு நிதி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐடி துறை மந்தமாக இருப்பதாக சொல்லப்படும் சூழலிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8.7 சதவீதம் உயர்ந்து 6,921 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்போசிஸ் நிறுவனத்தின் வருமானம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 7.5% உயர்ந்து 42,279 கோடி ரூபாயாக இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்து 6,921 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 6.2 சதவீதம் உயர்ந்து 8,803 கோடி ஆக இருக்கிறது. நிறுவனத்தின் பங்கின் Earnings per share 8.6 சதவீதமாக உயர்ந்து ஒரு பங்குக்கு 16.70 ரூபாய் என அதிகரித்திருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது என்பது இந்த காலாண்டு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மொத்தம் 3.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறதாம். இதில் 55 சதவீத ஒப்பந்தங்கள் புதிதாக இந்த நிறுவனத்திற்கு வந்தவை என இதன் தலைமை செயல் அதிகாரியான சலில் பரேக் தெரிவித்திருக்கிறார் . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஏஐ சார்ந்த சேவைகளுக்கு இன்போசிஸை தேடி வருகின்றன என அவர் கூறியிருக்கிறார் . தற்போது இன்போசிஸ் கைவசம் 7533 கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனம் 45,204 கோடி ரூபாய் பணத்தை முதலீடாகவும் செய்து வைத்திருக்கிறது தெரிய வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இருக்கக்கூடிய இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. மார்ச் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் 3, 23, 578 பேர் ஊழியர்களாக இருந்தனர். ஆனால் இந்த காலாண்டில் அந்த எண்ணிக்கை 3, 23, 788 என உயர்ந்திருக்கிறது. அதாவது கடந்த காலாண்டில் நிறுவனம் புதிதாக 210 பேரை வேலைக்கு சேர்த்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்போசிஸ் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 8,456 பேர் இணைந்துள்ளனர்.
2026ஆம் நிதியாண்டில் தன்னுடைய முதல் காலாண்டிலேயே மிக வலுவான தொடக்கத்தை இன்போசிஸ் நிறுவனம் காட்டியிருப்பதாக தெரிவித்து இருக்கும் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக், கான்ஸ்டன்ட் கரன்சி டெர்ம்ஸ் என்ற பிரிவில் தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 0 முதல் 3 சதவீதமாக இருக்கும் என முன்பு கூறியது, அதனை 1 முதல் 3 சதவீதமாக உயர்த்துகிறோம் என தெரிவித்து இருக்கிறார். அதே வேளையில் மேக்ரோ பொருளாதாரம் சூழல்கள் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் இன்னும் அது முழுமையாக மீண்டு வரவில்லை எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications