இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்திய இளைஞர்களை வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றக் கூறியதும், இலவசங்கள் வேண்டாம் எனக் கூறியது, AI பெரிய பிரச்சனை எனப் பல கருத்துக்களை வெளியிட்டு இந்த வருடம் பெரும்பாலான காலத்தில் இன்போசிஸ் பெயர் டிரெண்டிங் ஆகவே இருந்தது.
ஆனால் நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வெளியேறியது, இதன் மூலம் உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம், சமீபத்தில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இழந்தது, அதை அனைத்திற்கும் பொறுப்பான சிஇஓ சலில் பாரிக் குறித்து இதுவரையில் பேசவில்லை. ஆனாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

இன்போசிஸ் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த டெக் சேவை ஒப்பந்தத்தைச் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு பெயர் வெளியிடாத நிறுவனத்துடன் செய்திருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை இன்போசிஸ் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இன்போசிஸ் உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சர்வதேச நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் இரு தரப்பும் மாஸ்டர் ஒப்பந்தத்தைத் தொடரப்போவது இல்லை எனச் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக 3 நாட்களுக்குப் பின்பு துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் மட்டுமே சுமார் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்த 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் 15 வருடத்திற்கானது, இது வெற்றி அடைந்திருந்தால் வருடம் 100 மில்லியன் டாலர் அளவிலான வருமானம் அடுத்த 15 வருடத்திற்கு இதன் வாயிலாகக் கிடைத்திருக்கும்.
இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சனிக்கிழமையே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் வர்த்தகம் துவங்கும் போது இன்போசிஸ் பங்குகள் அதன் முந்தைய விலையான 1562.90 ரூபாயில் இருந்து 1535 ரூபாயாகக் குறைந்து 2.6 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications