இன்ஃபோசிஸ் அதிரடி ஏற்றம்.. லாபத்தினை புக் செய்த முதலீட்டாளர்கள்.. 6% சரிவில் பங்கு விலை..!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 6% வீழ்ச்சி கண்டு, 1320 ரூபாயாக காணப்படுகிறது.

ஏன் என்ன காரணம்? இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு அறிக்கையும், 2021ம் நிதியாண்டு அறிக்கையும் கூட சாதகமாகத் தானே வந்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் முதலீட்டாளரளுக்கு ஆதரவாக கடந்த நிதியாண்டிற்கு டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது.

இப்படி பல சாதகமான விஷயங்கள் உள்ள நிலையில் ஏன் இந்த சரிவு? வாருங்கள் பார்க்கலாம்.

லாப விகிதம் சரிவு

லாப விகிதம் சரிவு

ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 17.47% அதிகரித்து, 5,076 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4,321 ரூபாயாக இருந்தது. ஆக கடந்த காலாண்டினை காட்டிலும் இந்த லாப விகிதம் 2.32% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 5,197 கோடி ரூபாயாகும்.

வருவாய் கணிசமான அதிகரிப்பு?

வருவாய் கணிசமான அதிகரிப்பு?

இதன் வருவாய் 26,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.08% அதிகம் என்று தெரிவித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டதட்ட 2% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வருவாய் 23,267 கோடி ரூபாயாகவும், இதே கடந்த காலாண்டில் 25,927 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது செவ்வாய்கிழமையன்று, பிஎஸ்இ-யில் 1.91% சரிந்து, 1398.60 ரூபாயாகவும், இதே என்எஸ்இ-யில் 2.01% குறைந்து 1397.15 ரூபாயாகவும் சரிந்துள்ளது. இதுவே புதன்கிழமையன்று சந்தை விடுமுறை என்பதால், இதன் தாக்கம் சந்தையில் இல்லை. இதற்கிடையில் இன்று சரிவினைக் கண்டுள்ளது.

பங்கு விலை வரலாற்று உச்சம்

பங்கு விலை வரலாற்று உச்சம்


கடந்த ஏப்ரல் 12 அன்று இன்ஃபோசிஸின் பங்கு விலையானது அதன் வரலாற்று உச்சமான 1480-ஐ தொட்டது. இன்று வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதே மார்ச் மாதத்தில் இருந்து பார்க்கும்போது 15% ஏற்றம் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் எஸ் & பி சென்செக்ஸ் 1% மட்டுமே அதிகரித்துள்ளது. இது மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தினை புக் செய்வதால் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்று காலையில் பங்கு விலை

இன்று காலையில் பங்கு விலை

இதற்கிடையில் தான் இன்று காலையிலேயே இன்ஃபோசிஸ் நிறுவனம் 4% வீழ்ச்சி கண்டு, 1347 ரூபாயாக காணப்பட்டது. இதே சென்செக்ஸ் 0.21% ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் வருவாய் கடந்த காலாண்டினை காட்டிலும் 5.6%மும், கடந்த ஆண்டை காட்டிலும் 38.6%மும், பங்களித்துள்ளன. இதற்கிடையில் நிறுவனத்தில் ஊதிய உயர்வுகள் இருந்தபோதிலும் கூட, மார்ஜின்கள் நன்றாக உள்ளன.

வருவாய் எதிர்பார்ப்பு

வருவாய் எதிர்பார்ப்பு

இதற்கிடையில் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 12 - 14% வருவாய் இருக்கும் என்றும், இயக்க விளிம்பு 22 - 24% இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிர்வாகம் 9,200 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. இதனை 1750 ரூபாய் என்ற விலையிலும் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+