மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3% அதிகரித்து, இன்று வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது.
இன்று பிஎஸ்இ வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்கு விலையானது 3% அதிகரித்து, 1,037 ரூபாயாக புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 21, 2020 அன்று அதிகபட்சமாக 1030.80 ரூபாயினை தொட்டிருந்த நிலையில், இன்று அது 1037 ரூபாயினை தொட்டுள்ளது. இந்த நிலையில் இதன் சந்தை மதிப்பானது 4.5 டிரில்லியன் ரூபாயினை தொட்டுள்ளது.
நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம்
செப்டம்பர் 1 முதல், S&P BSE SENSEX குறியீடு 2.4% சரிவடைந்துள்ளது. மாறாக தகவல் தொழில்நுட்ப துறையினை குறியீடானது 13% ஏற்றம் கண்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் 15 அன்று இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 14, 2020 அன்று நடைபெற உள்ளது. அன்று இந்த நிறுவனத்தின், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் அரை ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை முடிவுகள் அறிவிக்கப்படலாம். அதோடு இடைக்கால ஈவுத் தொகை ஏதேனும் இருந்தால் அதுவும் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகரிக்கும்
இன்ஃபோசிஸ் அதன் ஏப்ரல் - ஜூன் காலாண்டு வருவாயில் வலுவான லாபத்தினை அறிவித்தது. அதோடு பல ஒப்பந்தங்களையும் வென்றதாக கூறியது. இந்த நிலையில் தற்போதும் அதே நன்மைகள் தொடர்வதாலும், இந்த காலாண்டிலும் வலுவான வளர்ச்சியினைக் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐடி துறையில் கொரோனாவின் பாதிப்பு சற்று இருந்த போதிலும், வலுவான புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் மற்றும் சில மார்க்யூ ஒப்பந்தங்களை மூடுவது என்பன, இருந்ததால், சற்று குறைவான தாக்கத்தினையே கண்டது.
ஹெச்சிஎல் டெக்னாலஜி வருவாய்
இதே போல் ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனமும் செப்டம்பர் காலாண்டில் லாபம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் வலுவான புதிய ஒப்பந்தங்களையும் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 1% வீழ்ச்சி கண்டு, 814.35 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இன்போசிஸ் பங்கு விலை
இதே இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்றைய சந்தை முடிவில் 1.24% அதிகரித்து 1019.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது குறைந்தபட்சமாக 1008.10 ரூபாயாகவும், அதிகபட்சமாக 1037 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது. உண்மையிலேயே இது வாடிக்கையாளர்களுக்கு இது செம சான்ஸ் தான்..
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications