பெங்களூர்: மக்களுக்கான தொழிலதிபர் என போற்றப்பட்ட ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்கு அவர் வருகை தந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நூறாண்டு காலத்திற்கும் மேல் தொழில் புரியக்கூடிய தொழில் குழுமம் தான் டாடா. இப்படி நூறாண்டு கால குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்த ரத்தன் டாடா தன்னுடைய 86 வயதில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா.
ரத்தன் டாடா உடனான தங்களுடைய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம் ரத்தன் டாடா உடனான ஒரு பிரத்யேக நினைவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக செயல்படக்கூடிய இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரில் தன்னுடைய தலைமையகத்தை கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்திருக்கிறார். அந்த வீடியோவினை இன்போசிஸ் நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ரத்தன் டாடா ஒரு மரக்கன்றினை நடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அது பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது என்ற தகவலையும் இன்போசிஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்தாராம். அந்த காலகட்டத்தில் பெங்களூரில் நிறுவப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஐடி நிறுவனங்களில் இன்போசிஸ் அலுவலகமும் ஒன்று. அப்போது இன்போசிஸ் நிறுவனர்கள் ரத்தன் டாடாவை அழைத்து தங்களுடைய அலுவலகத்தை சுற்றி காட்டியுள்ளனர்.
தன்னுடைய வருகையின் நினைவாக ரத்தன் டாடா Tabebuia Rosea மரக்கன்றினை அந்த வளாகத்தில் நட்டுள்ளார். பிங்க் நிறத்தில் பூக்களை வழங்கும் இந்த மரம் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் பெங்களூர் அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்திருந்தார்.
அப்போது இந்த செடியினை அவர் நட்டார், தற்போது மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. செடி மட்டுமல்ல நம்முடைய நோக்கமும் தொலை நோக்கு பார்வையும் கூட வளர்ந்திருக்கிறது என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை தொடரவும் உலகை ஒன்றாக முன்னோக்கி நகர்த்தவும் ரத்தன் டாட்டா கற்றுத் தந்த பாடங்கள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன என இன்போசிஸ் நிறுவனம் அந்த பதிவில் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications