இந்திய ஐடி சேவை துறையும், ஐடி ஊழியர்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் மாற்றங்களை கண்டு பீதியில் இருக்கும் வேளையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் டிசம்பர் காலாண்டுக்கான போனஸ் அறிவித்து வருகிறது. ஜனவரி மாதம் ஐடி நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் பிப்ரவரி மாதம் டிசம்பர் காலாண்டுக்கான போன்ஸ் தொகையை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்) பெர்பார்மன்ஸ் போனஸை தொகையை நேற்று ஊழியர்களின் அவரவர் ஈமெயில் ஐடி-க்கு அறிவித்துள்ளது.

பெர்பார்மன்ஸ் போனஸ் என்பது ஒவ்வொரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் (CTC) 30-40 சதவீத தொகையை போனஸ் ஆக ஒதுக்கப்படும், இந்த போனஸ் தொகையை 4 காலாண்டுக்கு பிரித்து ஊழியரின் செயல்திறன், ஊழியர் பணியாற்றும் டீம்-ன் செயல்திறன், இன்போசிஸ் செயல்திறன் என பல காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டு அளிக்கப்படும்.
இப்படி இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டுக்கான போன்ஸை சராசரியாக 85% தொகை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது இந்த நிதியாண்டில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச போனஸ் தொகை என்பது தான் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஏஐ மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சமும், பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு அதிகப்படியான போனஸ் தொகையை அறிவித்துள்ளது, உண்மையில் இன்ப அதிர்ச்சி தான்.
பல ஊழியர்கள் 75% முதல் 100% வரை போனஸ் பெற்றுள்ளனர். சிலர் முழு 100% போனஸைப் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூறியது போல் போனஸ் தொகை அல்லது வேரியபிள் பே என்பது பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டு அளிக்கப்படுவதால், இதன் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுப்படும்.
இந்த போனஸ் தொகை பிப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து ஊழியர்கள் வங்கி கணக்கி கிரெடிட் செய்யப்படும்.
ஏன் இந்த அதிகப்படியான போனஸ்?
இன்போசிஸ் கடந்த காலாண்டில் சிறப்பாக செயல்பட்டதும், புதிய வணிக ஒப்பந்தங்கள் பெறப்பட்டதும், ஒட்டுமொத்த நிறுவன செயல்திறன் வலுவாக இருந்ததும் தான் இந்த அதிகப்படியான போனஸ் கிடைக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இது ஏன் முக்கியம்?
ஐடி துறையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையில் இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இன்போசிஸ் 2025-26 நிதியாண்டில் கொடுக்கப்பட்ட போனஸ்-ல் அதிகு அதிகப்படியானது.
இன்போசிஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகள்
இன்போசிஸ், 2025-26 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டு முடிவில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,654 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.6,806 கோடியாக இருந்ததால், வருடாந்திர அடிப்படையில் 2.2% (தோராயமாக ரூ.152 கோடி) சரிவு ஏற்பட்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் (செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில்) லாபம் 9.6% குறைந்துள்ளது.
ஆனால் வருவாய் பக்கத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆப்ரேட்டிங் வருவாய் 8.9% உயர்ந்து ரூ.45,479 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.41,764 கோடியாக இருந்தது. நிலையான நாணய அடிப்படையில் (constant currency) வருவாய் வருடாந்திர அடிப்படையில் 1.7% உயர்ந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் 0.6% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது நிறுவனத்தின் வர்த்தகத்தில் வலிமையை காட்டுகிறது.
மேலும் இயக்க லாபம் (operating profit) ரூ.8,355 கோடியாக குறைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் 6% மற்றும் காலாண்டு அடிப்படையில் 10.7% சரிவு ஏற்பட்டுள்ளது. இயக்க லாப வீதம் (operating margin) 18.4%-ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 21.3% ஆகவும், செப்டம்பர் காலாண்டில் 21% ஆகவும் இருந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவு குறைவுக்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் (labour codes) தொடர்பான ஒரு முறை செலவு மற்றும் பிற முக்கிய செலவுகள் காரணமாகக் ஏற்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக, லாப சரிவு இருந்தாலும் வருவாய் அதிகரிப்பும், பெரிய ஒப்பந்தங்கள் (large deals) மற்றும் AI தொடர்பான வளர்ச்சியும் இன்ஃபோசிஸின் வலுவான நிலையை உறுதிப்படுத்துகின்றன.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications