அமெரிக்க, ஐரோப்பிய வங்கி திவால் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையால் இந்திய ஐடி துறை பாதிக்கப்படுமா என்ற அச்சம் இன்றளவும் இருக்கும் வேளையில், முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை என்ன முடிவு எடுக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் முக்கிய தரவுகளை ஐடி ஊழியர்களுக்கு கொடுத்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் வியாழக்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த காலாண்டு முடிவுகளில் லாபம், வருமானம், வளர்ச்சி கணிப்புகள், ஈவுத்தொகை போன்றவை முதலீட்டாளர்களுக்கு முக்கியமானதாக இருந்தாலும், ஊழியர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்த தகவல் என்பது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் படி, இதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,43,234 ஆக உள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 3,46,845 ஆகவும், மார்ச் 2022 காலாண்டு முடிவில் 3,14,015 ஆக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஊழியர்கள் எண்ணிக்கை 29,219 அதிகரித்துள்ளது, ஆனால் முந்தை காலாண்டை ஒப்பிடுகையில் 3611 பேர் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டில் நடத்தது, இன்போசிஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் நடந்தது.
இதைவிட முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் சாப்ட்வேர் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் தான். மார்ச் 31, 2023 காலாண்டு முடிவில் இன்போசிஸ் சாப்ட்வேர் ஊழியர்கள் எண்ணிக்கை 3,24,816 ஆக உள்ளது, இது டிசம்பர் காலாண்டில் 3,29,296 ஆகவும், மார்ச் 2022 காலாண்டு முடிவில் 2,97,859 ஆக உள்ளது.

டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் சாப்ட்வேர் ஊழியர்கள் எண்ணிக்கை 4,480 ஆக குறைந்துள்ளது. இது பெரும் சரிவாக பார்க்கப்படும் வேளையில் சேல்ஸ் மற்றும் சப்போர்ட் பிரிவில் ஊழியர்கள் எண்ணிக்கை 17,549ல் இருந்து 18,418 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நிறுவனத்தில் சராசரி ஊழியர் வருமானமும் 57,700 டாலரில் இருந்து 53,400 டாலராக குறைந்துள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் பாதித்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் 27.7 சதவீதத்தில் இருந்து 20.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதேவேளையில் இன்போசிஸ் குரூப் HR பிரிவு தலைவராக SHAJI MATHEW நியமிக்கப்பட்டு உள்ளார். இப்பதவில் இருந்த கிருஷ்ணமூர்த்தி சங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications