இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், வருமான வரி ரீபண்ட் மூலம் சுமார் ரூ.6,329 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்திற்கு இந்த ரீபண்ட் கிடைத்துள்ளது தனது காலாண்டு முடிவில் கட்டாயம் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வருமான வரி ரீபண்ட், வட்டி என 2007-08 முதல் 2018-19 வரையிலான 11 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (2016-17 தவிர) தொகை தான் இந்த ரூ.6,329 கோடி. பொதுவாக ஒவ்வொரு நிறுவனமும் தனது வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தும், சில நேரத்தில் பில்லிங் தொகைக்கும் கூடுதலாக வரி செலுத்தும் நிகழ்வும் நடக்கும்.

இதேபோல் வருடத்தின் இறுதியில் கணக்கிட்டு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள் வருமான வரித்துறை கூடுதல் வரியை திருப்பி செலுத்தும், அல்லது கூடுதலான வரியை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பும். இன்போசிஸ் நிறுவனத்திற்கு இரண்டுமே நடந்துள்ளது.
வருமான வரித்துறை 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்காக ரூ.2,763 கோடி வரி கோரிக்கையை நிறுவனத்திடம் வைத்துள்ளது என்று, இன்ஃபோசிஸ் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 31, 2024 ம் ஆண்டுடன் முடிவடையும் காலாண்டு மற்றும் ஆண்டின் நிதி அறிக்கைகளில் இந்த ரீபண்ட் வருமானம் மற்றும் வருமான வரித்துறையின் கோரிக்கை தொடர்பான உத்தரவுகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்து வருகிறோம் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2011-12 மதிப்பீட்டு ஆண்டிற்கான வட்டி உட்பட ரூ.4 கோடி வரி கோரிக்கையையும் இன்ஃபோசிஸ் எதிர்கொண்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் சில துணை நிறுவனங்களுக்கும் இதேபோன்ற வரி உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 நிதியாண்டில், இன்போசிஸ் நிறுவனம் சுமார் ரூ.9,214 கோடி ஒருங்கிணைந்த வருமான வரி செலவைக் கணக்கிட்ட குறிப்பிடத்தக்கது, இது முந்தைய நிதியாண்டை விட ரூ.1,250 கோடி அதிகமாகும்.
இன்ஃபோசிஸ் துணை நிறுவனங்களுக்கும் தனித்தனி அறிவிப்புகளில், 2021-22 மற்றும் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுகளுக்காக ரூ.145 கோடி, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்காக ரூ.127 கோடி மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்காக ரூ.5 கோடி வரி பாக்கி தொடர்பான வருமான வரி நிலுவை உத்தரவுகளும் உள்ளது.
மேலும், ஒரு இன்போசிஸ் துணை நிறுவனத்திற்கு 2007-08, 2008-09 மற்றும் 2016-17 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான ரூ.14 கோடி மதிப்பிலான வரி ரீபண்ட் கிடைத்துள்ளன. அனைத்து உத்தரவுகளும் வருமான வரி சட்டம் 1961 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications