இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு பொதுவாக ஜூன், ஜூலை மாதத்தில் அறிவிக்க வேண்டிய சம்பள உயர்வு அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறது சலில் பாரிக் தலைமையிலான நிர்வாகம்.
இது மட்டும் அல்லாமல் சம்பள உயர்வு இருக்கிறதா இல்லையா என்பதை கூட அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாத மோசமான நிலையில் தான் இன்போசிஸ் உள்ளது. இப்படியிருக்கும் வேளையில் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வுக்கான ஆய்வு பணிகளை இன்போசிஸ் துவங்கியுள்ளது.

சலில் பாரிக் தலைமையிலான இன்போசிஸ் நிர்வாகம் அதன் மேனேஜர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் செம்படம்பர் 29 முதல் ஊழியர்களுக்கான செல்ஃப் எவால்யூவேஷன் துவங்கும் அக்டோபர் மாதம் ஃபர்பாமென்ஸ் ரிவ்யூ சைக்கிள் துவங்கும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் செம்படம்பர் 29 இன்போசிஸ் ஊழியர்கள் தங்களுடைய சுய மதிப்பீட்டை வழங்கும் பணிகள் துவங்க உள்ளனர். இது முடிந்து அக்டோபர் மாதம் இறுதியில் மேனேஜர்கள் ஊழியர்களின் தனி மதிப்பீட்டை ஆய்வு செய்து ரேட்டிங் வழங்க உள்ளனர்.
கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அளிக்காமல் இன்போசிஸ் பெரும் தொகையை சேமித்து, பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் லாபத்தை உயர்த்தி காட்டி தனது சந்தை மதிப்பை கூட்ட பயண்படுத்திக்கொண்டது. இதுவரையில் சலில் பாரிக் தலைமையிலான நிர்வாகம் கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடாமல் இருக்க பல காரணங்கள் உண்டு.
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து 10க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் வெளியேறி போட்டி நிறுவனங்களின் சிஇஓ ஆகவும், உயர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில்.. சம்பள உயர்வு அளிக்க முடியாது என்பதை வெளிப்படையாக சொன்னால் ஊழியர்களும் பணியை ராஜினாமா செய்வார்கள் என்ற அச்சத்தில் கூட அறிவிக்காமல் இருக்கலாம்.
இல்லையெனில் டிசம்பர் காலாண்டில் அரியர்களுடன் சம்பளத்தை அளிக்க திட்டமிட்டு உள்ளதா..? எதுவாக இருந்தாலும் இன்போசிஸ் வெளிப்படையாக கூறினால் மட்டுமே உண்மையாகும். இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 0.51 சதவீதம் உயர்ந்து 1,467.55 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இன்போசிஸ் பங்குகள் 3.72 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2022-23 நிதியாண்டில் அவருடைய வருடாந்திர ஊதியம் 21 சதவீதம் குறைந்து 56.4 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த சில வருடங்களாக 70 முதல் 75 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்கி வந்த சிலில் பாரிக்-ன் சம்பளம் கடந்த ஆண்டு குறைந்தது.


Click it and Unblock the Notifications