இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் ஜூன் காலாண்டு முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இன்போசிஸ் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 5 வருட திட்டத்தை பெற்றுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்போசிஸ் இந்த புதிய ப்ராஜெக்ட்-ஐ பெற்றுள்ள டெக்னாலஜி தான்.
சமீப காலமாக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை பெற அதிகளவிலான சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இன்போசிஸ் சத்தமில்லாமல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை பெற்றுள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல்-க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

இன்போசிஸ் நிறுவனம் தற்போது பணியாற்றி வரும் முக்கிய வாடிக்கையாளரிடம் இருந்தே செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் அடிப்படையிலான 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 5 வருட Modernization மற்றும் Maintenance சேவை திட்டத்தை பெற்றுள்ளது என மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் தான் புதிதாக பெற்றுள்ள 2 பில்லியன் டாலர் ப்ராஜெக்ட் திட்டத்தை எந்த வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுள்ளது என அறிவிக்கவில்லை. இதற்கான அறிவிப்பை இன்போசிஸ் வியாழக்கிழமை தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசமான வர்த்தக சூழ்நிலையில் இன்போசிஸ் தனது வாடிக்கையாளரிடம் இருந்தே 2 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பெற்றுள்ளது மிகவும் பெரிய விஷயம்.
இன்போசிஸ் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டில் 4-7 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது, இது கடந்த 6 வருடத்தில் மிகவும் குறைவான அளவாகும். மேலும் நாளை வெளியிட உள்ள ஜூன் காலாண்டு முடிவில் இன்போசிஸ் தனது அப்பட் என்ட் வளர்ச்சி அளவான 7 சதவீதத்தை 6 அல்லது 6.5 சதவீதமாக குறைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மோசமான சந்தை நிலை.
இன்போசிஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 1.21 சதவீதம் உயர்ந்து 1,439.95 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 1,457.90 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ஜூன் காலாண்டு முடிவுக்கு பின்பு பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்தையும் விட முக்கியமாக இன்போசிஸ் செயற்கை நுண்ணறிவு துறையில் 2 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பெற்றது தான், இப்புதிய தொழில்நுட்பத்தில் இதுவரையில் யாரும் இவ்வளவு பெரிய வர்த்தகத்தை பெற்றது இல்லை.


Click it and Unblock the Notifications