இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவரும், எழுத்தாளரும் பொறியாளருமான சுதா மூர்த்தி அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.
அதில் தான் 3000 தேவதாசிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையை எடுத்ததாகக் கூறினார். இது தன்னுடைய வாழ்க்கையில் பெருமைமிக்க விஷயமாக கூறினார்.

அந்த நேர்காணலில் சுதா மூர்த்தி கூறுகையில், நான் இதுவரை நீச்சல் கற்றுக் கொண்டதில்லை. இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் நான் பிறந்து வளர்ந்த பகுதியில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. எனவே நீச்சலை மறக்க வேண்டியது தான்.
நான் குளம் நிறைய தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் நீச்சலடிக்கும் எண்ணம் தோன்றாது, இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே. இது குடிப்பதற்கு பயன்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பேன்.
அதில் குதித்துக் குளிக்க வேண்டும் என்று என் மனதில் எப்போதும் தோன்றியதில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் சுதா மூர்த்தியிடம் நீங்கள் மிகவும் பெருமைப்படும் காரியம் ஏதாவது உண்டா என்று கேட்டார்.
அதற்கு சுதா மூர்த்தி பதிலளிக்கையில், நான் 3000 தேவதாசிகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து மற்றவர்களைப் போன்று இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கு உதவினேன். இதன் மூலம் எனது கடமை முடிந்ததாக நினைத்தேன். இதனால் நான் கடவுளிடம் கூறினேன்.
நான் உன் குழந்தைகளுக்கு சேவை ஆற்றிவிட்டேன். இதைத் தவிர எனது வாழ்க்கையில் எனக்கு வேறு ஆசைகள் கிடையாது என்றேன். இதுதான் எனது பெருமைக்குரிய விஷயம் என்றார். இந்த வார்த்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்த பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இதைத் தொடர்ந்து அந்த நெறியாளர், உங்களுக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும் என்று தெரியும். உங்களது புத்தகத்தை வாங்குபவர்களுக்கு நீங்கள் அதில் கையெழுத்திட்டு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சுதா மூர்த்தி தனது வாழ்க்கையில் பல்வேறு அறச்செயல்களைச் செய்துள்ளார். நலிவடைந்தவர்களின் கல்வி மேம்பாடு, சமூக மேம்பாடு, இளம்பெண்களுக்கு வாய்ப்புகள் அளித்தல் மற்றும் மருத்துவ உதவிகள் இதில் அடங்கும்.
தனது கணவர் இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக தான் சேர்த்து வைத்திருந்த அவசரகால சேமிப்பில் இருந்து ரூ.10,000ஐ முதலீட்டுக்காகக் கொடுத்து உதவினார். இதுபோன்று பல்வேறு பரோபகார நடவடிக்கைகளில் இன்றைக்கும் சுதா மூர்த்தி ஈடுபட்டு வருகிறார். Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications