ஒரு முறை சுதா மூர்த்திக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது தனது கணவர் நாராயண மூர்த்திக்கு வந்ததாக நினைத்து விட்டார் ஆனால் அந்த அழைப்பை செய்தது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சுதா மூர்த்தி ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரை பற்றி பாராட்டுவதற்கு போன் செய்துள்ளார். இதை சுதா மூர்த்தி இப்போது நினைவுகூர்ந்தார்.
இன்போசிஸ் பவுண்டேஷனின் முன்னாள் தலைவரான சுதா மூர்த்தி இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒருநாள் எனக்கு வந்த போன்காலில் நான் அப்துல் கலாம் பேசுகிறேன். சுதா மூர்த்தி இருக்கிறீர்களா. அவரிடம் பேச வேண்டும் என்று கூறினார்.

இது ஏதோ தவறான அழைப்பு. எனது கணவருக்கு வந்த அழைப்பாக இருக்கும் என்றேன். ஆனால் பேசியது உண்மையிலேயே அப்துல் கலாம். அப்போது எனது கட்டுரை பற்றி குறிப்பிட்ட கலாம் என்னை அதற்காக பாராட்டினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று சுதா குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் 2006இல் சுதா மூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருதை அப்துல் கலாம் வழங்கினார்.
இந்தக் கட்டுரை பற்றி சுதா மூர்த்தி கூறுகையில், ஒரு முறை கடைக்கு சென்ற நான் அங்கிருந்த மாம்பழங்களை வாங்கினேன். என்னிடம் ஒரு டஜன் பழத்துக்கு ரூ.100 வாங்கிய கடைக்காரர் எனது மாணவியிடம் 1 டஜன் பழத்துக்கு ரூ.200 வாங்கினார்.
இது பற்றி அவரிடம் கேட்டதற்கு நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் இது உங்களுக்குப் புரியாது என்று கூறினார். எனது மாணவி இன்போசிஸ் ஊழியர் எனவே அவருக்கு ரூ.200 கட்டுப்படியாகும் என்றார். அவரது மனப்போக்கு எனக்கு ஆச்சரியம் தந்தது என்று சுதா மூர்த்தி கூறினார்.
சாப்ட்வேர் ஊழியர்கள் என்றால் அவர்கள் தகுதிக்கு மேல் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர்களிடம் அதிக விலை வாங்குவது தப்பில்லை என்ற மனோபாவம் அந்த கடைக்காரரிடம் இருந்துள்ளது. இது சுதா மூர்த்தியை சிந்திக்க வைத்தது.
இதை அடிப்படையாக வைத்து எழுதிய கட்டுரையில் இந்த மனோபாவம் தவறு என்றும் தங்களது வேலைக்காக ஐடி ஊழியர்கள் நிறையவே மெனக்கெட வேண்டி இருப்பதால்தான் அவர்களுக்கு அதிக சம்பளத்தை ஐடி நிறுவனங்கள் தருகின்றன. இதற்காக அவர்களை தண்டிக்கும் வகையில் அதிக விலையை வசூலிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கட்டுரையில் சுதா மூர்த்தி எழுதினார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications