இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சல் தான் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது ஹைபிரிட் வேலை முறை நடைமுறையில் இருக்கிறது. அதாவது ஊழியர்கள் ஒரு மாதத்தில் கட்டாயம் 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்.

இப்படி ஹைபிரிட் முறையில் வீட்டில் இருந்து வேலை செய்ய கூடிய ஊழியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது. அந்த மின்னஞ்சலில் வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வழங்கும் படி இன்போசிஸ் நிறுவனம் கேட்டிருக்கிறது.
அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பி உள்ள மின்னஞ்சலில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் வேலைக்காக எவ்வளவு மின்சாரத்தை நுகர்கிறார்கள் என்பது தொடர்பான சர்வே கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கான பதில்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறது.
வீட்டில் இருந்து பணி செய்யும் போது பேன், லைட், ஏசி என என்னவெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் வீட்டில் சோலார் மின் உற்பத்தி அமைப்பு இருக்கிறதா என்பன உள்ளிட்ட கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது ஹைபிரிட் பாலிசி முறையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு இந்த சர்வே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் முறையில் பாதி நாள் வீடு, பாதி நாள் அலுவலக வேலை என்பது நம்முடைய நிறுவன வேலை முறையில் ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டது என கூறியிருக்கும் இன்போசிஸ் நிறுவனம், இவ்வாறு நம் வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய சமயத்தில் அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களை நாம் கணக்கெடுத்துக் கொள்வது நல்லது என கூறி இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனம் தங்களின் கார்பன் வெளியீட்டு அளவை குறைப்பதில் கவனமாக இருக்கிறது. 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்போசிஸ் நிறுவனம் கார்பன் வெளியீட்டு அளவை பாதியாக குறைத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் நிறுவன செயல்பாட்டுக்கு தேவையான 77% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து தயாரித்து பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் தங்களுடைய ஊழியர்களும் இதனை பின்பற்றவும் ஒட்டுமொத்தமாக கார்பன் வெளியீட்டு அளவை குறைக்கவும் இந்த மின்சார பயன்பாட்டு அறிக்கையை கேட்கிறதாம். ஊழியர்களின் பதில்களை அடிப்படையாக கொண்டு மேலும் கரியமில வாயு வெளியீட்டை எப்படி குறைப்பது என்பது குறித்து திட்டமிடப்படும் என இன்போசிஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications