இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது திடீரென உயர்மட்ட அதிகாரி ஒருவர் பணிமாற்றப்பட்டு உள்ளார்.
அமெரிக்க பொருளாதாரம் ரெசிஷனில் அச்சத்தில் இருந்து மீண்டுள்ளது என கூறப்படும் வேளையில் சிறிய டீல்கள் சந்தையில் இல்லாதது இன்போசிஸ் உட்பட அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் அக்டோபர் மாதம் முதல் சுமார் 6 உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், INFOSYS நிறுவனத்தின் HR பிரிவின் தலைவரான (Head of Human Resources) ரிச்சர்ட் லோபோ இடத்தில் சுஷாந்த் தரப்பன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவில் ஏற்பட்டுள்ள 2வது பெரிய உயர்மட்ட மாற்றமாகும். இந்த வருடத்தின் துவக்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் HR பிரிவின் குளோபல் ஹெட் ஆக இருந்த கிரிஷ் ஷங்கர் ஓய்வுபெற்ற நிலையில் இப்பதவியில் ஷாஜி மேத்யூவ் நியமிக்கப்பட்டார். ஷாஜி மேத்யூவ் இதற்கு முன்பு இன்போசிஸ் மைசூர் சென்டரை தலைமை தாங்கி நிர்வாகம் செய்து வந்தார்.
சுஷாந்த் தரப்பன் இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 முதல் பணியாற்றி வருகிறார், St Aloysius கல்லூரியில் BSc மற்றும் மங்களூர் பல்கலைகழகத்தில் MBA பட்டத்தை பெற்ற சுஷாந்த் தரப்பன் இன்போசிஸ் நிறுவனத்தில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
சுஷாந்த் தரப்பன் இதற்கு முன்பு, Talent Acquisition பிரிவின் குளோபல் ஹெட், ப்ராடெக்ட், பிளாட்பார்ம்ஸ் மற்றும் சொல்யூஷன் பிரிவின் தலைமை HR, Edgeverve-ன் தலைமை மக்கள் அதிகாரி (CPO) என பதவிகளில் இருந்துள்ளார்.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வள பிரிவில் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதை தொடர்ந்து சில நாட்களில் இன்போசிஸ் நிறுவனத்தில் HR பிரிவில் நடந்துள்ள மாற்றம் பல சந்தேகங்களை ஏற்படுத்தினாலும். இதற்கு இடம் கொடுக்காமல் இதற்கு முன்பு HR பிரிவின் தலைவரான ரிச்சர்ட் லோபோ முக்கிய இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications