இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் மூத்த நிர்வாகி ஒருவர் திடீரென வெளியேறியுள்ளார். 2022 அக்டோபர் மாதம் முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறி வரும் வேளையில் புதிதாக ஒரு வெளியேறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான சார்லஸ் சலாமே (Charles Salameh), செப்டம்பர் 1 முதல் நிறுவனத்தின் சங்கோமா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக சேர உள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் சார்லஸ் சலாமே உலகளாவிய அக்கவுன்ட் எக்ஸ்பேன்ஷன் தலைவராக பணியாற்றினார். இன்போசிஸ் வர்த்தகத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இவர் பொறுப்பு என்று இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
சார்லஸ் சலாமே-வும் பிற மூத்த அதிகாரிகள் வரிசையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறிய உலகளாவிய ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது சிறிய இந்திய போட்டி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்போசிஸ் நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்தார். ஜூன் மாதம், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைவர் மோஹித் ஜோஷி அதன் போட்டி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா-வின் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைந்தார்.
இதேபோல், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை தகவல் மூலோபாய அதிகாரி (CISO) விஷால் சால்வி கடந்த மாதம் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Quickheal நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்.
கடந்த நவம்பர் மாதம் விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்கா 2 பிரிவின் சிஇஓ-வாக இருந்த Angan Guha, பிர்லாசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியில் சேர்ந்தார். இதேபோல் விப்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான Mohd Haque, Ashish Saxena ஆகியோரும் வெளியேறினர்.
விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல், இன்ஜினியரிங் மற்றும் அப்ளிகேஷன் சர்வீஸ் பிசினஸ் லைன் தலைவராக இருந்த ராஜன் கோலி ஏப்ரல் மாதம் CitiusTech தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார். விப்ரோவில் சிஓஓவாக இருந்த சஞ்சீவ் சிங் சிஎம்எஸ் ஐடி சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக தலைவராக சேர்ந்தார்.


Click it and Unblock the Notifications