இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறை நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பெங்களூர், மும்பை, டெல்லி என பெரு நகரங்களின் முக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இதுவரையில் இல்லாத வேகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு செல்ல துவங்கியுள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி உட்பட பல இடத்தில் சிறிதும் பெரிதுமாக அலுவலகங்களை கொண்டு இருந்தாலும் வடக்கு பெங்களூரில் யெலஹங்கா பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் இருக்கும் ஊழியர்களை அலுவலகத்திற்கு கொண்டு வர ஹைப்ரிட் மாடல் கொண்டு வரப்பட்டு உள்ளது.

யெலஹங்கா இன்போசிஸ் அலுவலகம் திங்கட்கிழமை முதல் இயங்கி வருகிறது. இதேபோல் இன்போசிஸ் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினத்திலும் தனது புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இன்போசிஸ் மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை திறந்து வருகிறது.
உதாரணமாக அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் இதுநாள் வரையில் பெரு நகரங்களில் மட்டுமே இயங்கிய வந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர், ஜெய்பூரில் புதிய அலுவகத்தை திறந்துள்ளது. அமெரிக்காவின் ஐபிஎம் பெரு நகரங்களை விட்டு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளது. Persistent Systems நிறுவனம் கோவா, நாக்பூரில் அலுவலகத்தை திறந்துள்ளது.
இந்தியாவின் பெரு நகரங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2.5 வருடத்தில் புவனேஸ்வர், கொச்சி, திருவனந்தபுரம், நாக்பூர், இந்தூர், வாரணாசி, காந்திநகர் என பல நகரங்களில் அலுவலகத்தை திறந்துள்ளது. விரைவில் டிசிஎஸ் கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான அலுவலகத்தை திறக்கவும் தயாராகியுள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வர காரணம் என்ன..? கொரோனா லாக்டவுன் காலத்தில் அதிகளவிலான டெக் ஊழியர்கள் சொந்த ஊரில் செட்டிலாகியுள்ளனர். பெரு நகரங்களுக்கு வர மறுக்கும் காரணத்தாலும், பெரு நகரங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், சிறு நகரங்களில் ரியல் எஸ்டேட், ஊழியர்கள் சம்பளம் குறைவு என்பதாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் திறன்வாய்ந்த ஊழியர்களை நீண்ட கால அடிப்படையில் நியமிக்க ஐடி நிறுவனங்கள் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கிறது.
இந்த மாபெரும் மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தாலும் ஐடி நிறுவனங்களுக்கு குறுகிய கால அடிப்படையில் அதிகப்படியான செலவுகளை ஈர்க்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பல வகையில் நன்மை உள்ளது. இதேபோல் இந்த முக்கிய மாற்றத்திற்கான அடிப்படை காரணம் WORK FROM HOME.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications