சென்னை: இந்திய ஐடி துறை குறுகிய காலத்திற்கு மந்தமான வர்த்தக சூழ்நிலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐடி துறையினரைச் சற்று பயமுறுத்தியது என்றால் மிகையில்லை.
அமெரிக்காவில் உள்ள வங்கி, நிதி சேவை நிறுவனங்கள் (BFSI) மிகவும் கவனமாக டெக் சேவைகளுக்குச் செலவுகளைச் செய்வதால், இந்திய ஐடி துறையில் குறுகிய காலத்திற்கு, மந்தமான டிமாண்ட் நீடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ஐடி சேவைத் துறைக்கு 30-40 சதவீத வருவாய் BFSI பிரிவில் இருந்து வரும் வேளையில், இத்துறை டெக் சேவைகளுக்கு செலவு செய்வதில் தயக்கம் காட்டுவதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது.
இருப்பினும், மீடியம் மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகச் சந்தையில் சிக்னல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இதுவரையில் பணிநீக்கம் செய்யாத இந்திய ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யுமா என்ற அச்சம் கிளம்பியுள்ளது.
பிரபல பங்குத் தரகு நிறுவனமான ஆன்டிக் ஸ்டாக் புரோக்கிங் (Antique Stock Broking) வெளியிட்ட அறிக்கையின்படி, சமீப காலங்களில் வலுவான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது அடுத்த சில காலாண்டுகளுக்கு அதன் வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் கொண்டு செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெக் நிறுவன முதலீட்டாளர்களுக்கு Antique Stock Broking வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய மந்தமான வர்த்தக சூழ்நிலையில் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்கள் அதிகமாகப் பாதிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்கள் சிறிய நிறுவனங்களைத் தவிர்ப்பது சிறந்தது என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது முதலீடு செய்ய சிறந்த நிறுவனமாக இருப்பது என்ற பட்டியலில் ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, Mphasis ஆகியவை விருப்ப தேர்வாக இருப்பதாக Mphasis ஆன்டிக் ஸ்டாக் புரோக்கிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications