இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள் அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை முதன்மையாக வைத்திருந்தாலும், இதற்கு தேவையான ஊழியர்களை இந்தியாவில் இருந்து அழைத்து செல்வதில் பல பிரச்சனைகள் உள்ளது.
இதில் முக்கியமாக விசா பிரச்சனை, குறிப்பாக டெனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் இந்தியர்களுக்கு அதிகப்படியான விசா மறுக்கப்பட்ட காணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது கவனத்தை மொத்தமாக அமெரிக்கா பக்கம் திருப்பியது. இதன் மூலம் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கனடாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.

இப்படியிருக்கும் வேளையில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டியதில் இருந்து இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதனால் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் கனடாவில் போட்ட திட்டமெல்லாம் வீணாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்போசிஸ் : இந்த வருடம் ஜூலை மாதம் இன்போசிஸ், தனது வட அமெரிக்க கிளை நிறுவனமான இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் (IPS), கனடாவில் 2024 ஆம் ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை பணியில் சேர்க்கும் திட்டத்துடன் IPS Canada Inc என்னும் கிளை நிறுவனத்தை உருவாக்கியது.
IPS Canada நிறுவனம் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு கனடாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு சேவை அளிக்க திட்டமிட்டு இருந்தது. இதில் முக்கியமாக கனடா நாட்டின் அரசு அமைப்புகள், அமைச்சகங்கள், நகராட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்களுக்கான தேவையும் அடக்கம். இதன் மூலம் கனடா நாட்டின் அரசு சேவையில் இன்போசிஸ் நேரடியாக பணியாற்றும்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) : கனடா நாட்டின் ஜெட் உற்பத்தி நிறுவனமான Bombardier தனது டிஜிட்டல் டிரன்ஸ்பார்மேஷன் மற்றும் இன்னோவேஷ் மேம்பாட்டுக்காக இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் Payments Canada உடன் முக்கிய கூட்டணியை அறிவித்தது. Payments Canada என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய பேமெண்ட் சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிறுவனத்தின் ரியல் டைம் ரெயில் சேவையை மேம்படுத்த டிசிஎஸ் கைகோர்த்தது.
விப்ரோ (Wipro) : இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ ஜனவரி மாதம் விப்ரோ- AWS Launch Pad சென்டரை டொராண்டோ-வில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் விப்ரோவின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் வேகமாகவும் கிளவுட் சேவைக்கு மாற முடியும் என நம்பியது.
நாஸ்காம் அமைப்பு கனடா - இந்தியா மத்தியிலான பிரச்சனைக்கு மத்தியில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நாடுகள் மத்தியிலான பிரச்சனையில் கீழ் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும் நிலைமை ஏதுமில்லை எனவும், இக்குறித்து கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications