ஐடி வேலை மட்டும் கிடைத்துவிட்டால் எப்படியும் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கை உடன் இருக்கும் பலருக்கு, இந்த வருடம் வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது சற்று கடினம் தான். இதேபோல் ஏற்கனவே பணியாற்றும் நிறுவனத்தில் பணி சூழல் அல்லது சம்பள உயர்வு சரியாக இல்லை என வேறு நிறுவனத்திற்கு மாற திட்டமிடுவோருக்கும் இந்த அண்டு கடினமான சூழல் நிலவும்.
இந்தியாவில் ஐடி சேவை துறை நடப்பு நிதியாண்டில் ஒரு மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளர்கள் இந்த நிதியாண்டின் ஊழியர் பணியமர்த்தல் அளவு 40 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 நிதியாண்டில், ஐடி சேவை நிறுவனங்களில் 50,000 முதல் 1,00,000 பணியாளர்கள் வரை மட்டுமே தங்களுடைய நிறுவன பணியில் சேர்க்கும் என பெங்களூரைச் சேர்ந்த ஸ்டாஃப்பிங் நிறுவனமான Xpheno தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஐடி சேவை நிறுவனங்களின் பணியமர்த்தல் அளவு 2,50,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டுக்கான கணிப்புகள் மிகவும் குறைவாகும். ஐடி சேவை துறை நிறுவனங்களின் பணியமர்த்தல் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ஐடி சேவை துறையில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் மந்தநிலை.
ஜூன் 30, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதியாளர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 21,838 பேர் குறைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐடி ஐடி சேவை நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கும். ஜூன் காலாண்டில் அக்சென்ச்சர், கேப்ஜெமினி மற்றும் காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை தலா 5000 சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications