நவீன காலத்திற்கு ஏற்ப இயந்திரங்களின் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற காரணங்களால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 350 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் செனட் (NITES) தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து உடனடியாக விசாரணை நடத்த கர்நாடக தொழிலாளர் ஆணையருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்ஃபோசிஸ், கடந்த 2021ம் ஆண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி நூறு கோடி அமெரிக்க டாலர் சந்தை மூலதனத்தை அடைந்த நான்காவது இந்திய நிறுவனமாக மாறியது. இதையடுத்து, 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, வருவாய் மற்றும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இன்போசிஸ் இரண்டாவது பெரிய இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்தநிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு புதிதாக 350 பேரை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணியில் அமர்த்தியது. இதையடுத்து, மைசூரு வளாகத்தில் ஜாவா புரோகிராமிங் மற்றும் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (DBMS) ஆகிய மூன்று தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதையடுத்து, 350 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதாவது, இந்த தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது அவசியம் ஆகும். இந்த பணிநீக்கம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, சமீபத்தில் விப்ரோ நிறுவனத்திலும் நடந்த பணிநீக்க நடவடிக்கையை பிரதிபலிக்கிறது. அதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சில ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதால், ஊழியர்களின் தொழில்நுட்ப அறிவு சரியாக உள்ளதா என்பதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெறாவிட்டால் நிறுவனத்தில் தொடர்ந்து வேலைபார்க்க முடியாது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பணிநீக்கம் தொடர்ந்து TCS, Wipro, HCLTech போன்ற பெரிய நிறுவனங்களும் புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை குறைத்துள்ளன. இது, இந்திய ஐடி துறையில் பணியமர்த்துவதில் தாமதம் மற்றும் வேலை இழப்பு போன்ற முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தநிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் செனட் NITES,இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, 350 பேரை பணிநீக்கம் செய்த இன்ஃபோசிஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரியும், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கர்நாடக தொழிலாளர் ஆணையருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications