பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி- க்கு தேவையான டிஜிட்டல் தளத்தை உருவாக்கி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்ஐசி இந்தியாவின் முக்கியமான காப்பீட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தற்போது காப்பீட்டு துறையை பொறுத்தவரை பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்த இடத்தை பிடிக்கும் போட்டியில் உள்ளன. இந்நிலையில் நவீன சந்ததியினருக்கு ஏற்ப எல்ஐசி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது. அதாவது எல்ஐசி நிறுவனம் முழுவதுமாக தங்களுடைய சேவைகளை டிஜிட்டலுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தை நாடியுள்ளது.

எல்ஐசி நிறுவனம் டிஜிட்டல் இன்னோவேஷன் அண்ட் வேல்யூ என்ஹேன்ஸ்மெண்ட் எனப்படும் DIVE (Digital Innovation and Value Enhancement), திட்டத்தின் மூலம் தங்களுடைய செயல்பாடுகளை நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது.
இதற்காக இன்போசிஸ் நிறுவனம் எல்ஐசி நிறுவனத்திற்கு தேவையான சிஸ்டம் இன்டகிரேசன் , ஏஐ செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட சேவைகளையும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனம் டிஜிட்டல் கட்டமைப்புக்கு மாறுவதற்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்புகளையும் இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி தரவுள்ளது.
தற்போது இருக்கும் எந்த ஒரு செயல்முறையும் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் தளம் எல்ஐசி நிறுவனத்தின் பயன்பாட்டு முறையையே மாற்றி அமைக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது ஃபின் டெக் நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
அதாவது எல்ஐசி வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக எல்ஐசியில் காப்பீடு பெற விரும்புபவர்கள் அனைவரும் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இந்த டிஜிட்டல் தனமானது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக வங்கிகள் மற்றும் பின்டெக் நிறுவனங்களோடு எல்ஐசி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்துடனான தங்களது இணைப்பு எல்ஐசி நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்ற பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இருக்கிறது என எல்ஐசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சித்தார்த்தா மோகன்டி தெரிவித்துள்ளார். அதேபோல நவீன தொழில்நுட்பங்களை எல்ஐசிக்கு கொண்டு சேர்ப்பதில் பங்களிக்கிறோம் என்பது மகிழ்ச்சி தருவதாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரம் சலீல் பரேக் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications