இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் பெருவாரியான ஊழியர்கள் பணி புரிகின்றனர். சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2025-ஆம் ஆண்டில் 40,000 பேரை டிரெயினி ரோல்களுக்கு பணியமர்த்த இருப்பதாக அறிவித்தது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் 2026-ஆம் நிதியாண்டில் 20,000-த்திற்கும் அதிகமான ஃபிரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பணியமர்த்தல் தொடர்பான இந்த அறிவிப்பு, இன்போசிஸ் நிறுவனம், தனது 3-வது காலாண்டின் நிதிநிலை அறிக்கையை அறிவித்த பிறகு வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வியாழக்கிழமை அன்று தன் வருடாந்திர விற்பனை கணிப்பை உயர்த்தி அறிவித்தது. அதோடு டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் 14.4 சதவீதம் அதிகரித்ததாக தெரிவித்தது.

இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சாஃப்ட்வேர் சர்வீஸ் ப்ரோவைடர்களில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மேற்கத்திய சந்தைகளில் இருந்து கிடைக்கிறது. இந்த பகுதிகளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சேவையை அதிக அளவில் பெறுகின்றனர்.
இன்போசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் வருவாய் வளர்ச்சியை 4.5 சதவீதம் முதல் 5.0 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் நிறுவனம் 11.4 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.6,806 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது ரூ.6,770 கோடியாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டதை விட அதிகமாகும்.
இந்தியாவின் 254 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையின் ஒரு பகுதியாக இருக்கும் இன்ஃபோசிஸ், கடந்த ஆண்டு வளர்ச்சியில் மந்தநிலையைச் சந்தித்தது. ஏனெனில் அதிக பணவீக்கம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர்.
ஆனால் அதன் பிறகு பணவீக்கம் சற்று குறைய தொடங்கியதால் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இதற்கு அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்புகளும் உதவியது. மேலும் தொழில்நுட்பங்களில் செலவிட வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர்.
ஆனால் திடீரென மந்தநிலை ஏற்பட்டபோது ஐடி துறையை சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான இளம் இந்திய பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகள் பாதித்தது. இருப்பினும் சமீபத்திய காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 5591-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications