பொங்கல் கிஃப்ட்: இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. சோகத்தில் இருந்த டெக்கிகள் கொண்டாட்டம்..!!

இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை வழங்க உள்ளதாக முக்கிய அதிகாரி ஊழியர்களுக்கு அறிவித்துள்ள காரணத்தால் சோகத்தில் இருந்த இன்போசிஸ் டெக்கிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இது ஆண்டை சிறப்பான காலாண்டு முடிவுகள் உடன் துவங்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் கடந்த வாரம் இன்போசிஸ் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை 2025ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு 4வது காலாண்டில் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

பொங்கல் கிஃப்ட்: இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. சோகத்தில் இருந்த டெக்கிகள் கொண்டாட்டம்..!!

இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் ஊழியர்கள் மத்தியில் எழுந்த அதிர்ப்தியை உணர்ந்து, முன்னதாக அறிவித்த கால அட்டவணைக்கு இணங்க, பிப்ரவரி மாதத்தில் இருந்து கடந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அமலுக்கு கொண்டு வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாப் லெவல் 5 (JL5) வரையில் உள்ள ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தங்கள் சம்பள உயர்வுக்கான கடிதங்களைப் பெறலாம், சம்பள உயர்வு ஜனவரி 1 முதல் கணக்கிட்டு கொடுக்கப்படும். மேலும் ஜெஎல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் உள்ள ஊழியர்கள், அதாவது மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் மற்றும் டெலிவரி மேனேஜர்கள் ஆகியோருக்கு மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு கடிதங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

ஜெஎல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுவன வருவாய் செயல்திறனுடன் இணைக்கப்படும், ஒட்டுமொத்த வணிக வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இந்த விபரம் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமை Infosys Validation Services unit (IVS unit) பிரிவின் ஊழியர்களுக்கு நடந்த டவுன் ஹால் மீட்டிங்கில் மூத்த நிர்வாக அதிகாரி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் இன்போசிஸ் தரப்பில் இருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

இந்த ஆண்டு சம்பள உயர்வுகள் செப்டம்பர் 2022 முதல் அக்டோபர் 2023 வரையிலான மதிப்பீட்டு காலத்திற்குப் பொருந்தும், ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் அதாவது ரேட்டிங் டிசம்பர் 2023 இல் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஆனால் இதுவரையில் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை,

2024 ஆம் ஆண்டில் வழக்கமான ஜூன் மாத சம்பள உயர்வு சுழற்சி தாமதமாகி தற்போது இது பிப்ரவரி மாதம் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கான கடைசி சம்பள உயர்வு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செயல்படுத்தப்பட்டது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+