இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தது. இதில் முக்கியமாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வும் அறிவிப்பை ஐடி ஊழியர்கள் கொண்டாடி வரும் வேளையில், கல்லூரி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.
இன்போசிஸ் நிறுவனங்கள் இந்த வருடம் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவ் செல்லவில்லை என அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தில் அளவுக்கு அதிகமாக பிரஷ்ஷர்கள் இருப்பதாகவும், இதோடு அமெரிக்கா போன்ற முக்கிய வர்த்தக சந்தையில் மந்த நிலை உருவாகியிருப்பதை காரணமாக கூறுகிறது.

இந்த நிலையில் இன்போசிஸ் அறிவிப்பால் சோகத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் வகையில் இன்போசிஸ் உடன் 360 கோணத்திலும் போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
HCL இன் தலைமை மக்கள் அதிகாரி ராமச்சந்திரன் சுந்தரராஜன் கூறுகையில், HCL கடந்த ஆண்டு 27,000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்த்தது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் அதிகபட்ச பிரஷ்ஷர்கள் சேர்ப்பு விகிதமாகும்.
இந்த நிவையில் 2024 ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் ஏற்கனவே 5000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்த்துள்ளது, இந்த வருடத்தின் இறுதிக்குள் மொத்தமாக 10000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளதாக ராமச்சந்திரன் சுந்தரராஜன் தெரிவித்தார்.
இன்போசிஸ் கடந்த ஆண்டு 50000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தக சூழ்நிலைகள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இன்போசிஸ் கேம்பஸ் இண்டர்வியூவ் செல்லவில்லை என்றாலும் பிற வழிகள் குறிப்பாக காமன் என்டரென்ஸ் டெஸ்ட் மூலம் பணியில் சேர்க்கும். இதற்கு பட்டதாரி மாணவர்கள் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்.
இதேபோல் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா என அனைத்தும் தற்போது ஊழியர்களின் பயன்பாட்டு அளவீட்டை 85 முதல் 90 சதவீதம் வரையில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பென்சில் இருக்கும் ஊழியர்களை சிறப்பாக பயன்படுத்த இலக்கை கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications