அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரம் மந்தமாக இருக்கும் காரணத்தால் புதிய ப்ராஜெக்ட்களை வாங்க முடியாது என்றும், இந்த ஆண்டு முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் வருமானம் குறையும் எனவும் கணிக்கப்படும் வேளையில் டிசிஎஸ், இன்போசிஸ் அடுத்தடுத்து அதிக மதிப்புடைய திட்டங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தில் கடந்த 8 மாதத்தில் சுமார் 6 உயர் அதிகாரிகள் தங்களுடைய பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா-வை சிஇஓ-வாக நியமிக்கும் போதும், அவரை தொடர்ந்து சலில் பாரிக்-ஐ சிஇஓ-வாக நியமிக்கும் போதும் அதிகப்படியான ஊழியர்கள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது எவ்விதமான பெரிய மாற்றங்களும் இன்போசிஸ் நிறுவனத்தில் எடுக்காத வேளையில் 8 மாதத்தில் 6 உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கியமான தொழில்நுட்ப பிரிவாக விளங்கும் சைபர் செக்யூரிட்டி பிரிவின் தலைவரான விஷால் சால்வி மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு முக்கிய பிரிவான கிளவுட் - இன்பரா பிரிவின் தலைவர் நரசிம்ம ராவ் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.
விஷால் சால்வி மற்றும் நரசிம்ம ராவ் ஆகிய இருவரும் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் துணை தலைவராக இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து அக்டோபர் 2022 முதல் சுமார் 6 உயர்மட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.
இன்போசிஸ் BFSI பிரிவின் தலைவரான மோஹித் ஜோஷி ராஜினாமா செய்துவிட்டு, டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக பெறுப்பேற்றுள்ளார். இவருடைய பணியை டிசம்பர் மாத பிற்பகுதியில் துவங்குகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இன்ஜினியரிங் சர்வீசஸ் மற்றும் பிளாக்செயின் பிரிவின் தலைவராக இருந்த கோபிகிருஷ்ணன் உயர் துணை தலைவராக இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தற்போது CYBAGE நிறுவனத்தின் தலைவராக பெறுப்பேற்றுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் பிரசிடென்ட் ஆக இருந்த ரவி குமார் ராஜினாமா செய்துவிட்டு தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவராக பெறுப்பேற்றுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராகவும், BPM பிரிவின் குளோபல் சேல்ஸ் பிரிவின் தலைவராகவும் இருந்த கிபில் ஜெயின் ராஜினாமா செய்துவிட்டு Eclerx நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து முக்கிய வர்த்தக பிரிவின் தலைவர்களாக இருப்பவர்கள் ராஜினாமா செய்யும் காரணத்தால் இன்போசிஸ் ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதேவேளையில் இன்போசிஸ் பங்குகள் 2023 ல் மட்டும் சுமார் 16.10 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications