இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறுகளுடன் போராடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஒரு நல்ல செய்தியைத் தனது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இன்போசிஸ் கடந்த ஒரு மாதமாக அதிகளவிலான பங்கு முதலீட்டைப் பெற்று வரும் நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் துவங்கியது நிலையில், 1,755.60 ரூபாய் என்ற 52 வார உயர்வைத் தொட்டது.

இதன் உயர்வின் போது இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு வரலாறு காணாத விதமாக 100 பில்லியன் டாலரை தொட்டது. இதன் மூலம் இந்தியாவில் 4வது நிறுவனமான 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனமாக உருவெடுத்துள்ளது இன்போசிஸ்.
இதற்கு முன்பு டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகம் முடியும் போது இன்போசிஸ் பங்குகள் சுமார் 1.06 சதவீதம் சரிந்து 1,720.75 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது. இந்தச் சரிவின் காரணமாக 100.78 பில்லியன் டாலர் அளவீட்டை இழந்துள்ளது.
புதிய தளத்தில் இருக்கும் குளறுபடிகளைச் சரி செய்யச் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சர் காலக்கெடு விதித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பின்பு இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications