இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஐடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்து விட்டு அலுவலகத்திற்கு வருவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த மாற்றம் மெல்ல மெல்ல செய்து வரப்பட்டாலும் கட்டாயப்படுத்தும் போது பல பிரச்சனைகளை நிர்வாகங்கள் எதிர்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக பல ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யும் அளவுக்கு செல்வது மட்டும் அல்லாமல் செயல்திறனில் பாதிப்பு ஏற்படுவதை பல நிறுவனங்கள் எதிர்கொண்டு உள்ளது. ஏற்கனவே சம்பள உயர்வு குறித்த பிரச்சனை, நாராயண மூர்த்தியின் 70 மணிநேர பணி பேச்சு ஐடி நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்து வரும் இதே நேரத்தில் GCC நிறுவனங்களில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும் விதிமுறைகளை சில அணிகள், சில ஊழியர்கள் என குறிப்பிட்ட தலைவர்களின் கீழ் இருக்கும் வர்த்தக பிரிவுக்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதுதான் தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது.
இன்போசிஸ் துணை தலைவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சில வர்த்தக பிரிவில் பணியாற்றி வரும் பேன்ட் 5 மற்றும் 6 ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பிய ஈமெயில், இன்போசிஸ் நிறுவனத்தில் ரிட்டன் டூ ஆபீஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால் இதை வலிமையாக்கும் வகையில் நவம்பர் 20 முதல் மாதத்திற்கு 10 நாளாவது அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பேன்ட் 5 மற்றும் 6 ஊழியர்கள் என்றால் மிட் லெவல் மேனேஜர்ஸ் மற்றும் ப்ராஜெக்ட் ஹெட் பதவியில் இருப்பவர்கள். இன்போசிஸ் நிர்வாகம் அனைத்து ஊழியர்களையும் வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என அறிவுறுத்தும் வேளையில் மாதத்திற்கு 10 நாள் வாங்க என கெஞ்சும் நிலைக்கு இன்போசிஸ் வந்துள்ளது.
கடந்த மாதம் முதல் விப்ரோ, கேப்ஜெமினி, எல்டிஐமைண்டுட்ரீ நிறுவனத்திள் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 50 சதவீத நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என்ற கட்டாய விதிமுறையை கொண்டு வந்தது. இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் அனைத்து அசோசியேட் ஊழியர்களையும் வாரத்திற்கு 5 நாளும் அலுவலகத்திற்கு சரியான டிரஸ் கோட் உடன் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜிசிசி நிறுவனங்கள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. திறன் வாய்ந்த ஐடி ஊழியர்களை 30-40 சதவீத சம்பள உயர்வு கொடுத்து GCC நிறவனங்கள் ஈர்த்து, பணியில் அமர்த்தி வருகிறது. சம்பள உயர்வு இல்லாமலும், போதுமான மதிப்பு கிடைக்காத ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவின் டாப் 10 நிறுவனத்தில் மார்ச் மாதம் 21.1 லட்சம் பேர் பணியாற்றிய நிலையில், செப்டம்பர் 30 காலாண்டு முடிவில் அதாவது 6 மாத காலத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 20.6 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் டாப் 10 நிறுவனங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50,129 பேர் குறைந்துள்ளது. இதில் பெரும் பகுதி ஊழியர்கள் ஜிசிசி நிறுவனத்திற்கு மாறியவர்கள், இந்த இடத்தில் வருவாய் சரிவு காரணமாக புதிய ஊழியர்களை நியமிக்காத காரணத்தால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications