இன்போசிஸ் நிறுவனரும் இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவருமான நாரயணமூர்த்தி இந்த வருட துவக்கத்தில் இளம் டெக் ஊழியர்களுக்கும் முக்கியமான அறிவுரையை மிகவும் கடிமானதாகவே கூறினார்.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாராயணமூர்த்தி இளம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சரியானது இல்லை, இதற்கு எதிராக அவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். டெக் நிறுவனங்களில் மூன்லைட்டிங் பிரச்சனை மிகவும் மோசமாக இருந்த காலக்கட்டத்தில பேசினார் நாராயணமூர்த்தி.

இளம் டெக் ஊழியர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவுசெய்து நான் முன்லைட்டிங் செய்வேன், நான் வீட்டில் இருந்து வேலை செய்வேன், வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வருவேன் என்ற புதைகுழியில் சிக்கிவிடாதீர்கள் என கூறினார்.
இதற்கு ஏற்றார் போல் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு இன்போசிஸ் நிர்வாகம் ஊழியர்கள் செயல்திறன் குறைவாக உள்ளது இதை மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியது.
இதன் வாயிலாக இன்போசிஸ் தனது ஊழியர்களை வாரத்தில் 3 நாள் அலுவலகம் வருவதை 80 சதவீத ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்தியது. இதை தொடர்ந்து தற்போது அமெரிக்கா, கனடாவில் இருக்கும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வேளையில், நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது அமெரிக்க ஊழியரின் Work From Home குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் கொரோனா காலத்தில் தனது ஊழியர்களுக்கு கொடுத்த work from home சலுகையை தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இன்போசிஸ் நிர்வாகம் அதன் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் ஊழியர்களுக்கு நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்கள் வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு வந்து பணியை துவங்க உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறும் ஊழியர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது,
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாக திரும்பப்பெறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications