மாஸ் காட்டும் இன்ஃபோசிஸ்.. விரைவில் காக்னிசண்டை பின்னுக்கு தள்ளலாம்.. இந்திய நிறுவனம்ன்னா சும்மாவா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இன்ஃபோசிஸ் விரைவில் காக்னிசண்டின் இடத்தினை பிடிக்கலாம்.. அதாவது நம்பர் 2 இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய ஐடி நிறுவனங்களில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் காக்னிசண்டின் இடத்தை எட்டலாம்.

காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் விகிதம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருவாயினை விட, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வெளிநாடு வாழ் ட்விட்டர் ஊழியர்களுக்கும் சிக்கல்.. கதறும் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா? வெளிநாடு வாழ் ட்விட்டர் ஊழியர்களுக்கும் சிக்கல்.. கதறும் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா?

இன்ஃபோசிஸ் & காக்னிசண்ட்

இன்ஃபோசிஸ் & காக்னிசண்ட்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருவாய் விகிதம் 4.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாயுடன் ஒப்பிடும்போது 300 மில்லியன் டாலர்கள் மட்டுமே குறைவாக உள்ளது. காக்னிசண்டின் வருவாய் விகிதமானது 4.9 பில்லியன் டாலராகவும் உள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

காக்னிசண்ட் நிறுவனத்தின் நிலையான கரன்சி மூலம் வளர்ச்சி விகிதம் 5.6% அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 18.8% வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிலையான கரன்சி மூலம் வருவாய் விகிதம் 15-16% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் 7% வளர்ச்சி கண்டுள்ளது.

வருவாய் சரிவு
 

வருவாய் சரிவு

கடந்த 2011ல் காக்னிசண்ட் நிறுவனம் விப்ரோ நிறுவனத்தின் வருவாயினை தாண்டியது. 2012ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தினை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டில் காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் விகிதம் மூன்று மடங்கு குறைந்துள்ளது.

காக்னிசண்டின் வளர்ச்சி சரிவு

காக்னிசண்டின் வளர்ச்சி சரிவு

நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், நிறுவனத்திற்கான வளர்ச்சியினை மேம்படுத்த காக்னிசண்ட் நிறுவனம் முயற்சி எடுத்து வரும் நிலையிலும், டெலிவரி செய்வதில் சிரமப்பட்டு வருவதாக  தகவல்கள் கூறுகின்றன. மேலும் இது மந்த நிலையாலும் பாதிகப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் காக்னிசண்டின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காக்னிசண்டின் முக்கிய சேவைகள் சரிவு

காக்னிசண்டின் முக்கிய சேவைகள் சரிவு

மேலும் தொடர்ந்து காக்னிசண்ட் நிறுவனத்தின் வங்கித் துறை சார்ந்த பங்கானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. அதன் நிதி சம்பந்தமான சேவைகளில் இருந்து இழப்பினை கண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே ஹெல்த்கேர் துறையிலும் 5.5% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இது போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, போட்டி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றன.

அட்ரிஷன் பிரச்சனை

அட்ரிஷன் பிரச்சனை

காக்னிசண்ட் நிறுவனம் தொடர்ந்து மக்கள் தொடர்பான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதாவது அட்ரிஷன் விகிதம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. நிறுவனத்தில் தொடர்ந்து ஆறு காலாண்டுகளாகவே அட்ரிஷன் விகிதம் 30% மேலாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 35% ஆகவும் இருந்தது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

infosys will soon reclaim no 2 spot from cognizant soon

Infosys may soon replace Cognizant, That means it is expected to occupy the number 2 position.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X